உலகம்
பாகிஸ்தான் FM வானொலிகளில் இந்திய பாடல்களை ஒளிபரப்பத் தடை

May 2, 2025 - 07:28 AM -

0

பாகிஸ்தான் FM வானொலிகளில் இந்திய பாடல்களை ஒளிபரப்பத் தடை

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (PBA) நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தான் FM வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒளிபரப்ப தடை விதித்துள்ளதாக PBA பொதுச் செயலாளர் ஷகீல் மசூத் அறிவித்தார். 

பாகிஸ்தானின் தகவல்தொடர்புத் அமைச்சர் அட்டா தரார் இந்த நடவடிக்கையைப் பாராட்டினார். அவர் PBA-வின் முடிவை தேசபக்திக்கான எடுத்துக்காட்டு என்று விபரித்தார். 

இதுபோன்ற சோதனையான காலங்களில் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதிலும் அடிப்படை மதிப்புகளை ஆதரிப்பதிலும் அனைவரும் ஒற்றுமையாக நிற்கிறார்கள் என்பதற்கு இந்திய பாடல்கள் தடை செய்யப்பட்டுள்ளது சான்றாகும் என்று அவர் கூறினார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05