செய்திகள்
நல்லை ஆதீன குரு முதல்வருக்கு அஞ்சலி

May 2, 2025 - 03:38 PM -

0

நல்லை ஆதீன குரு முதல்வருக்கு அஞ்சலி

இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் பூதவுடலுக்கு பலரும் நல்லை ஆதீனத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் நல்லை ஆதீன குரு முதல்வர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (01) இறையடி சேர்ந்தார்.

 

குரு முதல்வரின் பூதவுடல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு இன்று (02) மதியம் கொண்டு வரப்பட்டது.

 

புகழுடலுக்கு மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

இறுதி கிரியை நிகழ்வுகள் இன்று மாலை 4 மணியளவில் நல்லை ஆதீனத்தில் நடைபெறவுள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05