உலகம்
உலகின் மிக வயதான பெண்மணி உயிரிழப்பு

May 2, 2025 - 05:48 PM -

0

உலகின் மிக வயதான பெண்மணி உயிரிழப்பு

உலகின் மிக வயதான பெண்ணாக அறியப்பட்ட கானபரோ லூகாஸ் காலமானார்.

 

கானபரோ ஜூன் 8, 1908 அன்று பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுலில் பிறந்தார். 1934 ஆம் ஆண்டு தனது 26 வயதில் கன்னியாஸ்திரியாக துறவு பூண்டு கானபரோ வாழ்ந்து வந்தார்.

 

வயது முதிர்வு காரணமாக கேசெரோஸில் உள்ள சாண்டா காசா டி மிசரிகார்டியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கடந்த 30 ஆம் திகதி உயிரிழந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

 

அவரது மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கானபரோ லூகாஸின் மரணத்துக்கு பின், இங்கிலாந்தைச் சேர்ந்த 115 வயதான எதெல் கேட்டர் இப்போது உலகின் வயதான பெண்மணியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05