செய்திகள்
இலங்கை பெண்களுக்கு முதல் வெற்றி

May 2, 2025 - 06:03 PM -

0

இலங்கை பெண்களுக்கு முதல் வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.


இதன்மூலம், தொடரில் முதல் வெற்றியை இலங்கை அணி பதிவு செய்துள்ளது.


கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.


இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 235 ஓட்டங்களைப் பெற்றது.


பதிலுக்கு ஆடிய இலங்கை அணி, 47வது (46.3) ஓவரில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 237 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப்பெற்றது.
 

இலங்கை அணி சார்பில் ஹர்ஷிதா சமரவிக்கிரம 77 ஓட்டங்களையும், கவீஷா தில்ஹாரி 61 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.


இவர்கள் இருவரும் 4வது விக்கெட்டுக்கு 128 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர்.


93 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பெற்ற ஹர்ஷிதா, போட்டியின் ஆட்டநாயகியாக விருது பெற்றார்.


இந்திய அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளையும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.


தென்னாப்பிரிக்க அணி, இலங்கை மற்றும் இந்தியாவுடன் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05