May 2, 2025 - 06:40 PM -
0
கொமர்ஷல் வங்கியானது அமெரிக்காவை தளமாகக் கொண்ட குளோபல் ஃபினான்ஸ் சஞ்சிகையினால், மீண்டும் ஒருமுறை இலங்கையின் சிறந்த வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் இந்த சஞ்சிகையானது இந்த மதிப்புமிக்க விருதை வங்கிக்கு 23ஆவது தடவையாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
குளோபல் ஃபினான்ஸின் உலகின் சிறந்த வங்கிகள் 2025 பட்டியலில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 28 நாடுகள் உட்பட கிட்டத்தட்ட 150 நாடுகளில் உள்ள நிதியியல் நிறுவனங்கள் அடங்குகின்ற நிலையில். அவற்றில் சிறந்த வங்கிகள் இந்த சஞ்சிகையினால் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
குளோபல் ஃபினான்ஸ் சஞ்சிகையின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சிறந்த வங்கிகள் தொடர்பான 2025 பதிப்பில், இலங்கையில் கொமர்ஷல் வங்கியுடன் அந்தந்த நாடுகளில் சிறந்த வங்கிகளாகத் தெரிவு செய்யப்பட்ட முன்னணி வங்கிகளான CBA (அவுஸ்திரேலியா), China Construction வங்கி (சீனா), HSBC (ஹொங்கொங்), ANZ (நியூசிலாந்து), DBS (சிங்கப்பூர்), SMBC (ஜப்பான்), ஸ்டேட் பாங்க் ஓஃப் இந்தியா (இந்தியா), City Bank (பங்களாதேஷ்) மற்றும் CTBC (தைவான்) ஆகியன இடம்பெற்றுள்ளன.
முடிவடைந்த நிதியாண்டானது, கொமர்ஷல் வங்கிக்கு இணையற்ற மைல்கற்கள் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் வெற்றியைக் கொண்டதாகும். நாம் எதிர்நோக்கியுள்ள கடன் மறுசீரமைப்பு உட்பட மற்றும் பிற சமூக அரசியல் சவால்களின் மத்தியில் இந்த சாதனையை நாம் ஈட்டியுள்ளோம். மேலும் குறிப்பிடத்தக்க வகையில் வங்கியானது வெற்றிகரமான உரிமைகள் பத்திர வெளியீட்டின் மூலம் 22.54 பில்லியன் ரூபாயை திரட்டியதுடன் ஒரு சிறந்த கடன் பத்திர வெளியீட்டை முகாமைத்துவம் செய்த நிலையில் விதிவிலக்கான நிதியியல் மீளெழுச்சி மற்றும் சந்தை நம்பகத்தன்மையை வெளிப்படுத்தியது. அதேவேளை மேலும் 115 சர்வதேச மற்றும் உள்நாட்டு விருதுகளை வென்றது. இந்நிலையில் நிலைபெறுதகு தன்மை, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு உதவும் முயற்சிகளில் புதிய தளத்தை உருவாக்கியது.
எனவே, இலங்கையின் சிறந்த வங்கியாக எமது வங்கியானது மீண்டும் ஒருமுறை முடிசூட்டப்பட்டதில் ஆச்சரியமில்லை. அக்டோபர் 18, 2025 அன்று வொஷிங்டன் டிசியில் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதிய (IMF)/உலக வங்கியின் வருடாந்த கூட்டத்தின்போது இடம்பெறவுள்ள விருது வழங்கும் விழாவில் குளோபல் ஃபினான்ஸினால் தெரிவு செய்யப்பட்ட சிறந்த வங்கிகள் கௌரவிக்கப்படவுள்ளன.
கொமர்ஷல் வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதலாவது இலங்கை வங்கியாகும். மற்றும் கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) துறைக்கு மிகப்பெரிய கடனுதவி வழங்குவதோடு, டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது. அத்துடன் இலங்கையின் முதலாவது 100% கார்பன் நடுநிலை வங்கியாகும். கொமர்ஷல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயல்படுத்துகிறது, மேலும் இலங்கை வங்கிகளுக்கிடையில் பரந்த சர்வதேச தடத்தைக் கொண்டுள்ளது, பங்களாதேஷில் 20 நிலையங்கள், மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் பெரும்பான்மையுடன் கூடிய முழு அளவிலான Tier I வங்கி ஆகியவற்றை கொண்டு திகழ்கிறது.வங்கியின் முழு உரித்தான துணை நிறுவனமாக CBC ஃபினான்ஸ் லிமிடெட் திகழ்கிறது. வங்கியானது அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பரந்த அளவிலான நிதிச் சேவைகளையும் வழங்குகிறது.

