செய்திகள்
1500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நபர் கைது

May 3, 2025 - 08:52 AM -

0

1500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நபர் கைது

ரயில்வே திணைக்களத்தை சேர்ந்த சுற்றுலா பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவர், 1,500 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.


களனி பகுதியைச் சேர்ந்த நபரின் முறைப்பாட்டின் பேரில், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.


கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதியன்று, செல்லுபடியாகும் பயணச்சீட்டு இல்லாமல் கொம்பனித்தெரு ரயில் நிலையம் வழியாக பயணித்ததாகக் குற்றம் சாட்டி, முறைப்பாட்டாளரின் தேசிய அடையாள அட்டையை இந்த நபர் தனது காவலில் வைத்திருந்தார்.


அதன்படி, அந்த அடையாள அட்டையை திருப்பித் தருவதற்காக 3,000 ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரியுள்ளார்.


எனினும், நேற்று (2) அவர் அந்த தொகையை 1,500 ரூபாவாகக் குறைத்து, இலஞ்சமாகப் பெறும்போது கைது செய்யப்பட்டார்.


அவர் இன்று காலை 10.50 மணியளவில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள 7-8 ஆவது நடைமேடையில் அமைந்துள்ள சுற்றுலா பயணச்சீட்டு பரிசோதகர் அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05