உலகம்
சீன ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம்

May 4, 2025 - 04:07 PM -

0

சீன ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம்

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்யாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

அதன்படி, சீன ஜனாதிபதி மே 7ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை வளர்ப்பதற்காக சீன ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் மாஸ்கோவில் நடைபெறும் விழாவில் அவர் கலந்து கொள்ள உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த சந்திப்பின் போது சீன-ரஷ்ய உறவுகளின் வளர்ச்சி மற்றும் முக்கியமான சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து ரஷ்ய ஜனாதிபதியுடன் கலந்துரையைாடலை மேற்கொள்ள சீன ஜனாதிபதி திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05