செய்திகள்
இலங்கை மகளிர் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி

May 4, 2025 - 05:42 PM -

0

இலங்கை மகளிர் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி

இலங்கையில் இடம்பெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு எதிராக இன்று (04) இடம்பெற்ற போட்டியில் இலங்கை மகளிர் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

இந்திய மகளிர் அணி சார்பாக ரிக்கா கோஷ் 58 ஓட்டங்களையும், ஜெமிமா ரொட்ரிகோ 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் சமரி அத்தபத்து மற்றும் சுகந்திகா குமாரி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர். 

இந்நிலையில், 276 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை மகளிர் அணி 49.1 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் நிலக்‌ஷிகா சில்வா 56 ஓட்டங்களையும், ஹர்ஷிதா சமரவிக்ரம 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

இந்த வெற்றியின் ஊடாக இலங்கை மகளிர் அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05