உலகம்
வௌிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி!

May 5, 2025 - 09:34 AM -

0

வௌிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி!

ஏனைய நாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். 

அமெரிக்க திரைப்படத் துறை வேகமாக சரிந்து வருவதால், இந்த தீர்வை வரிகளை விதிக்க அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கு அதிகாரம் அளிப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 

அமெரிக்காவில் மீண்டும் திரைப்படத் தயாரிப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி கூறுகிறார். 

இதற்கு ஆதரவைக் காட்டும் விதமாக, பிற நாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கான வரிகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Comments
0

MOST READ
01
02
03
04
05