May 5, 2025 - 10:14 AM -
0
இன்று (05) காலை கல்கிஸை கடற்கரை வீதிக்கு திரும்பும் சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இளைஞன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளும் CCTV காட்சிகள் '"அத தெரண'வுக்கு கிடைத்துள்ளது.
இன்று (5) காலை இடம்பெற்ற மேற்படி துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த இளைஞன் களுபோவில போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மரணித்த இளைஞன் தெஹிவளை - ஓபன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

