செய்திகள்
அம்பாறையில் வெடிமருந்து களஞ்சியசாலை உடைக்கப்பட்டு திருட்டு

May 5, 2025 - 11:40 AM -

0

அம்பாறையில் வெடிமருந்து  களஞ்சியசாலை உடைக்கப்பட்டு திருட்டு

அம்பாறை, தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன கிராமத்தில் அமைந்துள்ள வெடி மருந்து களஞ்சியசாலை உடைக்கப்பட்டு, அங்கிருந்த வெடிமருந்து உள்ளிட்ட வெடிபொருட்கள் திருடப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதுவரை கிடைத்த தகவல்களின்படி, 45 கிலோ கிராம் ஜெல் குச்சிகள், 10 மீட்டர் சேர்வீஸ் நூல், 4,100 டெட்டனேட்டர்கள் உள்ளிட்டவை திருடப்பட்டிருப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தனியார் கல்குவாரி உரிமையாளர்களின் வெடிமருந்து களஞ்சியாலை அங்கு உள்ளதுடன், அந்த வெடிமருந்து களஞ்சியாலையின் பாதுகாப்பிற்காக பொலிஸ் காவல் அரண் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

மூன்று வெடிமருந்து களஞ்சியாலைகளில் ஒன்றின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதையும், மற்றொன்று அப்படியே இருப்பதையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05