May 5, 2025 - 05:23 PM -
0
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற LankaPay Technovation விருதுகள் 2025 நிகழ்வில் இரண்டு தங்க விருதுகள் மற்றும் இரண்டு சிறப்புத் தகுதி (மெரிட்) விருதுகளைப் பெற்றதன் மூலம் இலங்கையில் டிஜிட்டல் வங்கிச் சேவையில் முன்னோடி என்ற தனது ஸ்தானத்தை DFCC வங்கி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் பரிணாம மாற்றத்தின் மூலம் புத்தாக்கம், வாடிக்கையாளரின் சௌகரியம் மற்றும் நிதியியல் உள்ளடக்கம் ஆகியவற்றில் DFCC வங்கியின் உறுதியான அர்ப்பணிப்பை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன.
DFCC வங்கி நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டும் தங்குதடையற்ற டிஜிட்டல் வங்கிச்சேவை தீர்வுகளை வழங்குவதில் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளை அங்கீகரித்து, ‘Bank of the Year for Excellence in Customer Convenience - Category C’ மற்றும் ‘Bank of the Year for Financial Inclusivity - Category C’ ஆகிய பிரிவுகளில் தங்க விருதுகளைப் பெற்றுள்ளது. மேலும், Overall Excellence in Digital Payments - Banking Institution’ மற்றும் ‘Best Common ATM Enabler of the Year - Category B’ ஆகியவற்றுக்கான சிறப்புத்தகுதி (மெரிட்) விருதுகளையும் வங்கி பெற்றுள்ளது. இது இலங்கையின் வளர்ந்து வரும் நிதியியல் தொழில்நுட்ப சூழல் கட்டமைப்பில் ஒரு முன்னோடியாக அதன் நற்பெயரை மேலும் உறுதிப்படுத்துகிறது.
LankaClear ஏற்பாடு செய்து வரும் LankaPay Technovation விருதுகள், டிஜிட்டல் நிதியியல் சேவைகளில் சிறந்து விளங்குவதைக் கொண்டாடுவதோடு, வாடிக்கையாளர் சேவை, புத்தாக்கம் மற்றும் அணுகல் வசதி ஆகியவற்றில் தூரநோக்கு சிந்தனை கொண்ட முயற்சிகளை முன்னெடுக்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கின்றன. பல பிரிவுகளில் DFCC வங்கிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் அதன் டிஜிட்டல் வளர்ச்சித் திட்டம் மற்றும் உள்ளடக்கிய வங்கிச்சேவை மூலோபாயம் ஆகியவற்றின் செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது. கடந்த வருடத்தில், DFCC வங்கி டிஜிட்டல் விரிவாக்கத்தில் தனது கவனத்தை தீவிரப்படுத்தியுள்ளது. DFCC Virtual Wallet, DFCC MySpace சுய வங்கிச்சேவை மையங்கள், மற்றும் DFCC One மொபைல் வங்கிச்சேவை செயலி உள்ளிட்ட அதன் டிஜிட்டல் தளங்களில் பயனர் அனுபவங்களை மேம்படுத்தி வருகிறது. இந்த தளங்கள் சௌகரியம், வேகம் மற்றும் எங்கேயும், எப்போதும் வங்கிச்சேவைகளுக்கான அணுகலை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது வங்கியின் டிஜிட்டல் உள்வாங்கல் வீதங்கள் மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.
DFCC வங்கியின் துணைத் தலைவரும், தலைமை டிஜிட்டல் அதிகாரியுமான ஒமர் சாஹிப் அவர்கள் இந்த அங்கீகாரம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “இந்த அங்கீகாரங்களை வெல்வது, தங்குதடையின்றிய வங்கிச்சேவை அனுபவங்களை தோற்றுவிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் வங்கியின் ஓயாத கவனத்தை பிரதிபலிக்கிறது. எம்மால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் வங்கிச்சேவை செயலியான DFCC One, உள்ளுணர்வை சிறப்பிக்கும் பயன்பாடு, அணுகக்கூடிய மற்றும் சக்திவாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளமை இந்த தூரநோக்குடனான குறிக்கோளுக்கு சிறந்ததொரு சான்றாகும். இது எங்கள் வாடிக்கையாளர்களின் விரல் நுனிகளில் முழு அளவிலான வங்கிச் சேவைகளை வழங்குகிறது, அவர்கள் எங்கிருந்தாலும், தமக்கு வேண்டியவாறு வங்கிச் சேவைகளை மேற்கொள்ள அவர்களுக்கு வலுவூட்டுகிறது. இந்த வெற்றிகள் எங்கள் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாங்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் கடின உழைப்பு மற்றும் புத்தாக்கங்களை மேலும் உறுதிப்படுத்துகின்றன,” என்று குறிப்பிட்டார்.
இந்த சாதனைகள், இலங்கையில் மிகவும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட மற்றும் டிஜிட்டல் முறையில் இயக்கப்படும் வங்கியாக மாறுவதற்கான DFCC வங்கியின் பரந்த தூரநோக்கு குறிக்கோளுடன் ஒத்திசைகின்றன. LankaPay Technovation விருதுகள் நிகழ்வில் கிடைத்த அங்கீகாரம், அனைத்து இலங்கை மக்களுக்கும் வங்கிச்சேவையின் எதிர்காலத்திற்கு மீள்வரைவிலக்கணம் வகுப்பதற்கான அதன் பயணத்தில் மற்றொரு சாதனையாகும்.
DFCC வங்கி குறித்த விபரங்கள்
1955 ம் ஆண்டில் நிறுவப்பட்ட DFCC வங்கி பிஎல்சி, 1956 முதல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனைச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது. இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறையின் கீழ் இயங்குவதுடன், Fitch Ratings இடமிருந்து A (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ள இவ்வங்கி, திறைசேரி, முதலீடு மற்றும் வாணிபக் கடன் தீர்வுகளுடன் சேர்த்து, தனிநபர், வர்த்தக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான விரிவான வங்கிச்சேவைகள் அனைத்தையும் வழங்கி வருகின்றது.
வாடிக்கையாளர்களை மையப்படுத்தியும் மற்றும் நிலைபேணத்தக்க புத்தாக்கத்தை அடிப்படையாகவும் கொண்டு, DFCC MySpace போன்ற டிஜிட்டல் தளங்கள், 138 கிளைகளைக் கொண்ட வலையமைப்பு மற்றும் LankaPay வலையமைப்பிலுள்ள 5,500 க்கும் மேற்பட்ட ATM மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, இடைவிடாத மற்றும் பாதுகாப்பான வங்கிச்சேவை அனுபவத்தை DFCC வங்கி வழங்கி வருகின்றது.
நிலைபேற்றியல் சார்ந்த முயற்சிகளுக்கான கடன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகள் ஆகியவற்றுக்காக அங்கீகாரத்தைச் சம்பாதித்து, இவை தொடர்பில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகத் திகழ்ந்து வரும் DFCC வங்கி, சூழல் மீதான தாக்கங்களைக் குறைத்து, நீண்ட கால அடிப்படையில் பொருளாதார நெகிழ்திறனை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது.

