வணிகம்
Ceyline குழுமமும், லயன் பிரெவெரியும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற விநியோக மற்றும் பண்டகசாலைகளை நிறுவுவதன் மூலம் நிலையான எதிர்காலத்தினை உருவாக்கின்றன

May 5, 2025 - 05:42 PM -

0

Ceyline குழுமமும், லயன் பிரெவெரியும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற விநியோக மற்றும் பண்டகசாலைகளை நிறுவுவதன் மூலம் நிலையான எதிர்காலத்தினை உருவாக்கின்றன

இலங்கையின் முன்னணி கடல்சார் மற்றும் சரக்கு போக்குவரத்து குழுமமான சீலைனின் முழுமையான போக்குவரத்து தீர்வுகள் சீலைன் டோட்டல் சொல்யூஷன்ஸ் (Ceyline Total Solutions), லயன் பிரெவெரியும் (Lion Brewery) முதல் நிலையான எதிர்காலத்தை மையமாக கொண்ட பண்டகசாலை மற்றும் விநியோக மையத்தை வெறும் 100 நாட்களில் நிர்மாணித்துள்ளது. 

தங்கல்லையில் அமைந்துள்ள இவ் வசதி சுற்றுச்சூழல் பற்றிய பொறுப்பு இதன் வலுவான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றது. இக் கட்டமைப்பின் பாதி மீள்சுழற்சி செய்யப்பட்ட கப்பல் கொள்கலன்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது கழிவு மற்றும் காபன் வெளியீட்டை குறைக்கின்றன. 'Out of the box' என்ற நிலையான வாழ்விடங்களுக்காக சீலைனினால் செயற்படுத்தப்படும் இத்திட்டம் மறுசுழற்சி செய்யப்பட்ட மற்றும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட மதுபான உற்பத்தி கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருத்துதல்களை கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது நிலைத்தன்மை மற்றும் செலவுத்திறனை அதிகப்படுத்துகிறது. சுத்தமான மற்றும் பசுமையான எரிசக்தியால் இயங்குவதை உறுதி செய்வதற்காக, சூரியமின் சக்தி உற்பத்திக்கான அமைப்பினை நிறுவுவதற்காக இலங்கை மின்சார சபையின் அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பித்துள்ளது. மின்சாரத்தினால் இயங்கும் பாரஊர்திகள், மழைநீர் சேகரிப்பு மற்றும் சக்தி – சேமிப்புடன் இயங்கும் மின்விளக்குகள் ஆகிய விடயங்களை இணைப்பதன் மூலம் திறனான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததோர் விநியோக சங்கிலிக்கான தனது அர்ப்பணிப்பை மேலும் திறம்பட வெளிக்காட்டுகின்றது. 

இக்கூட்டணி ஓர் முன்னணியான பசுமை சரக்கு போக்குவரத்து முறைமையை நிறுவுவது மட்டுமன்றி, இலங்கையின் நிலையான பண்டகசாலைகளுக்கு ஓர் புதிய தர நிர்ணயத்தையும் உருவாக்கியுள்ளது. பொறுப்பான தொழில்துறைசார் வளர்ச்சியின் போது கூட்டணி நிறுவி கண்டுபிடிப்புக்களை மேற்கொள்வதில் இருக்கும் நன்மைகளை இது எடுத்துக்காட்டுகின்றது. 

லயன் பிரெவெரியின் (Lion Brewery) கவின் கயாத்மா மூத்த துணைத் தலைவர் (வெளிச் செல்லும் சரக்கு போக்குவரத்து) மேலும் கூறுகையில்: 'இந்த திட்டம் எங்கள் தனித்துவமான Route To Market அணுகுமுறையை மேலும் வலுப்படுத்துகிறது. சிந்தனைக்கு எழுப்புதல், திட்டமிடல், மற்றும் வடிவமைத்தல் ஆகியவற்றில் எங்கள் கூட்டுமுயற்சிகள் உண்மையிலேயே தனித்துவமான மாதிரியை உருவாக்குவதில் உச்ச கட்டத்தை எட்டியுள்ளன.' எங்கள் மூலோபாய நோக்கத்தை நடைமுறையான மற்றும் செலவு குறைந்த முறையில் அடையும் அதே வேளையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்காக சீலைன் (Ceyline) நிறுவனத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இங்கே தெளிவாக காட்டப்பட்டுள்ளது. 

சீலைன் (Ceyline) குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சதுர லகிந்து கூறுகையில்: '1985 முதல் கடல்சார் மற்றும் சரக்கு போக்குவரத்தில் நாங்கள் புதிய கண்டுபிடிப்புகளை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். லயன் பிரெவெரி உடனான (Lion Brewery) எங்கள் கூட்டாண்மை இலங்கை முழுவதும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளை உருவாக்குவதற்கும், நிலையான சரக்கு போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்குவதிலும், கூட்டு உருவாக்கங்களுக்காக இயங்குவதிலும் எங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.' 

விநியோக சங்கிலி தீர்வுகள் பொது மேலாளர் பிரபாத் கருணாரத்ன மேலும் கூறுகையில். 'இந்த திட்டம் சீலைன் (Ceyline) மற்றும் லயன் பிரெவெரி (Lion Brewery) ஆகிய இரண்டிற்கும் ஓர் சாதனையாகும். நிலைத்தன்மையை மையமாக கொண்டிருப்பதில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம். இது இத் தொழில்துறையை மிகவும் சுற்றுச்சூழல் பற்றி கரிசணையுள்ள எதிர்காலத்தை நோக்கி நகர்த்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை வலியுறுத்துகின்றது. 

“Out of the box” நிறுவனத்தின் பொது மேலாளர் மேவன் கூறுகையில்: Out of the box மீள்சுழற்சி செய்யப்பட்ட கொள்கலன்களை பயன்படுத்தி நிலையான வாழ்விடங்களை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தும் ஓர் நிறுவனமாகும். கழிவுகளை குறைப்பதன் மூலமும், கால வரையறைகளை விரைவுபடுத்துவதன் மூலமும், தரத்தை பராமரிப்பதன் மூலமும் நிலையான கட்டுமான துறையில் நாங்கள் புரட்சியை ஏற்படுத்துகிறோம். ஓர் மைல்கல்லான இக் கட்டுமானத்தை வெறும் 100 நாட்களில் வழங்கியதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.' 

ESG இயக்கப்படும் முழு விநியோக சங்கிலிக்குமான தீர்வுகளில் முன்னணியில் இருக்க சீலைன் (Ceyline) தயாராக உள்ளதுடன், லயன் பிரெவெரி உடனான (Lion Brewery) சீலைனின் கூட்டாண்மை இந்த அளவிலான பல ஒத்துழைப்புக்களை ஊக்குவிக்கும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05