May 5, 2025 - 05:49 PM -
0
இலங்கையின் காப்புறுதி சந்தையில் மிகப் பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்ட Softlogic Life Insurance, 2025 ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்பு ஷாங்ரி-லா ஹோட்டலில் தனது வருடாந்த விற்பனை மாநாட்டை நடத்தியது. “A Different Kind of Beast” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நிறுவனத்தின் சிறந்த விற்பனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்த கருப்பொருள், பல பலங்களைக் கொண்ட, எப்போதும் தழுவி மாறும், சவால்களை சமாளிக்கும் விற்பனை குழுவினரின் தனித்துவத்தை சிறப்பித்துக் காட்டுகிறது.
Softlogic Life விற்பனை மாநாட்டில் மூன்று விநியோக பிரிவுகளிலிருந்து (Agency, Alternat மற்றும் Micro) 446 சிறந்த சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். 2024 இல் சிறப்பான நிதி செயல்திறனைப் பதிவு செய்த நிறுவனம், 2014இல் ரூ. 3 பில்லியனாக இருந்த மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணத்தை (GWP - Gross Written Premium), 2024 இன் இறுதியில் ரூ. 31.6 பில்லியனாக உயர்த்தி, 10 ஆண்டுகளில் பத்து மடங்கு வளர்ச்சியை அடைந்துள்ளது. இது இலங்கையின் காப்புறுதித் துறையில் ஈடு இணையற்ற சாதனையாகும்.
Softlogic Life 2024 இல் ஆண்டுக்கு ஆண்டு 20% வளர்ச்சியுடனும், 17.2% மொத்த சந்தைப் பங்குடனும் செயல்பட்டுள்ளது. நிறுவனம் சுகாதார காப்புறுதித் துறையில் தனது தலைமைத்துவத்தை தொடர்ந்தது. அதேபோல, 1.3 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைப் பாதுகாத்தது மற்றும் ரூ. 14.8 பில்லியன் உரிமைக்கோரல்கள் மற்றும் சலுகைககளை தீர்வு செய்து, இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாக தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வில் Softlogic Life இன் துணை பிரதம நிறைவேற்று அதிகாரி இந்து ஆட்டிகல கருத்து தெரிவிக்கையில், ஒவ்வொரு வருடமும், எங்கள் விற்பனைக்; குழு ஒரு படி மேலே செல்கிறது. சவால்களுக்கு ஏற்ப மாறி, சந்தையை வெல்வதற்காக தங்களை உருமாற்றிக் கொள்கிறது. இந்த மாநாடு வெறும் எண்களின் கொண்டாட்டம் அல்ல. இது எங்கள் குழுக்களின் அச்சமற்ற மனப்பான்மை மற்றும் தீவிர முயற்சியை பாராட்டும் விழாவாகும். ‘A Different Kind of Beast’ என்ற கருப்பொருள் அவர்களின் பரிணமிக்கும் திறன், உத்திகளை மாற்றும் திறன், மற்றும் முன்னணியிலிருந்து வழிநடத்தும் திறனை சித்தரிக்கிறது. என்றார்.
“Million Dollar Round Table (MDRT)–இல் எங்கள் சாதனை தொடர்ச்சியாக உயர்ந்து வருகின்றது. இந்த ஆண்டில் மாத்திரம் 243 பேர் ஆனுசுவு-க்கு தகுதி பெற்றுள்ளனர். இது, உலக தரத்துக்கு உட்பட்ட நமது திறமைகளையும், மூன்று விற்பனை வலையமைப்புகள் அனைத்திலும் பின்பற்றப்படும் தரநிலைகளையும் காட்டுகிறது’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.
Softlogic Life இன் பல்வகைப்படுத்தப்பட்ட விநியோக உத்திகள் அதன் முக்கிய பலமாக விளங்குகிறது. Agency படை வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்ததுடன், மாற்று வழித்தடம் (Alternate Channel) 2024-இல் 35% வளர்ச்சி அடைந்து ரூ. 10 பில்லியன் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணம் (GWP) எல்லையைக் கடந்து ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியது.
இந்த நிலையில், நிறுவனத்தின் செயல்திறன் குறித்து Softlogic Life இன் தலைமை விநியோக அதிகாரி - மாற்று வழித்தடம் (Alternate Channel) பியுமால் விக்ரமசிங்க கூறுகையில், 'எங்கள் மாற்று வழித்தடத்தின் செயல்திறன் உத்திசார் நெகிழ்வு எவ்வாறு சக்திவாய்ந்த முடிவுகளை அளிக்கும் என்பதற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும். DTAP portfolio மூன்று மடங்கு வளர்ச்சியுடன் வலுவான வேகத்தைப் பெற்றுள்ளது. புசழரி டுகைந பிரிவும் 31% அபாரமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த வளர்ச்சி சந்தை மாற்றங்களைப் புரிந்துகொள்ளவும், பொருத்தமான தீர்வுகளுடன் விரைவாக பதிலளிக்கவும் எங்கள் ஆற்றலை எடுத்துக்காட்டுகிறது. அதேபோல, நாட்டின் மிக மதிப்பிடப்படும் நிறுவன வாடிக்கையாளர்களின் விருப்பமான காப்பீட்டாளர் (insurer of choice) என்ற மரியாதையைப் பெற்றிருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். மேலும், இது, நமது அணியின் மாறுபாடுகளும் வலிமைகளும் கொண்ட ஆற்றலின் நேரடி வெளிப்பாடாகும்.
குறைந்த சேவை பெறும் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்ட Micro Mobile Channel 2024 இல் 37% வளர்ச்சியடைந்து, ரூ. 1.9 பில்லியன் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணத்தை (GWP) பங்களித்துள்ளது. இந்த சேனல் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வான காப்புறுதி சேவைகளை வழங்கி, நாடு முழுவதும் ஆயுள் காப்புறுதி பாதுகாப்பை விரிவுபடுத்தியுள்ளது.
Softlogic Life நிறுவனத்தின் தலைமை Corporate சேவைகள் அதிகாரியும், Micro Channel இன் தலைவருமான திலங்க கிரிபோருவா தெரிவித்ததாவது, தபால் நிலைய வலைத்தளம் மற்றும் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனத்துடனான கூட்டுறவு கொண்ட Micro Channel இன் வளர்ச்சி வெறும் எண்களைப் பற்றியது அல்ல, ஒரு நோக்கத்தைப் பற்றியது. குறைவான சேவை பெறும் பகுதிகளுக்கு ஆழமாகச் சென்றடைந்து, ஆயுள் காப்புறுதியை அனைத்து இலங்கையர்களுக்கும் கிடைக்கும் உரிமையாக மாற்றியுள்ளனர். இது Softlogic Life இன் அனைவரையும் உள்ளடக்கும் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை காட்டுகிறது என்றார்.
இவ்வாண்டில் விருது பெற்ற 446 பேரில், Agency Channel இல் இருந்து 161 பேர், Alternate Channel இல் இருந்து 40 பேர், Micro Channel இல் இருந்து 2 பேர் சிறந்த சாதனையாளர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். மேலும் 243 MDRT தகுதியாளர்களும் கொண்டாடப்பட்டனர். இதில் Agency Channel இல் இருந்து 210, Alternate Channel இல் இருந்து 28, Micro Channel இல் இருந்து 5 பேர். Softlogic Life இன் விற்பனைப் படையினர் தொடர்ந்து நிறுவனத்தின் உயிர்நாடியாக திகழ்ந்து, எல்லையற்ற சிறப்பை அடைய உறுதியுடன் செயல்படுகின்றனர்.
Softlogic Life மற்றொரு ஆண்டின் குறிக்கோள் மற்றும் சாதனைகளை நோக்கி முன்னேறும் நிலையில், அதன் விற்பனை அணியானது இந்த நிறுவனத்தின் உயிர்நாடியாக திகழ்கிறது. மீள்திறன் கொண்ட, மூலோபாயம் மற்றும் எல்லையற்ற சிறப்பை அடைவதற்கு எந்த வகை சவாலுக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ள தயாராக உள்ளது.

