செய்திகள்
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : அத தெரணவின் விசேட ஒளிபரப்பு

May 5, 2025 - 10:15 PM -

0

 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : அத தெரணவின் விசேட ஒளிபரப்பு

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது இலங்கையில் மிகப்பெரும் பார்வையாளர்களை ஈர்த்து, மிகவும் வெற்றிகரமான தேர்தல் ஒளிபரப்பை வழங்கியது போலவே, நாளை (மே 6, 2025) நடைபெறவுள்ள 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்களையும், இறுதி அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் வரை உடனுக்குடன் வழங்குவதற்கு அத தெரண ஊடக வலையமைப்பு அனைத்து ஏற்பாடுகளையும் நிறைவு செய்துள்ளது.


'SRI LANKA DECIDES' என்ற விசேட தேர்தல் ஒளிபரப்பு மூலம், நவீன தொலைக்காட்சி தொழில்நுட்பத்துடன், மாறி மாறி வரும் தேர்தல் முடிவுகளின் உணர்வை உங்களுக்கு கொண்டு வர தயாராக உள்ளது.


2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை காலை 7:00 மணிக்கு ஆரம்பமாகிறது. அந்த தருணத்திலிருந்து, இலங்கை மக்களின் மிகவும் நம்பகமான செய்தி தரகரான அத தெரண, இந்த விசேட தேர்தல் ஒளிபரப்பு மூலம் அனைத்து தகவல்களையும் உங்களுக்கு நெருக்கமாக்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளது.


நாளை காலை 6:30 மணிக்கு 'தெரண அருண' நிகழ்ச்சியுடன் தேர்தல் தகவல்கள் வழங்கப்பட ஆரம்பிக்கும். காலை 8:00 மணி முதல் டிவி தெரண மற்றும் அத தெரண 24 ஆகியவற்றின் ஊடாக 'SRI LANKA DECIDES' விசேட தேர்தல் நேரலை ஒளிபரப்பு தொடர்ந்து பார்வையாளர்களுக்கு வழங்கப்படும்.


நாடு முழுவதும் பரவியுள்ள மிகவும் நம்பகமான மற்றும் வேகமான பிராந்திய ஊடகவியலாளர் வலையமைப்பு மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றும் அத தெரணவின் தயாரிப்பு குழுக்கள், உங்களின் தகவல் அறியும் உரிமையை உறுதி செய்யும் வகையில், தேர்தல் காட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரவுகளையும், தகவல்களையும் நாள் முழுவதும் உங்களுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளன.


தெற்காசியாவின் மிகப்பெரிய செய்தி அறையிலிருந்து, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் கிராஃபிக் அனிமேஷன் முறைகளைப் பயன்படுத்தி, வெளிநாட்டு நிபுணர் குழுக்களின் தொழில்நுட்ப ஆதரவுடன், சர்வதேச தரத்திலான தொலைக்காட்சி அனுபவத்தை உங்கள் வீட்டுத் திரையில் ஒப்பற்ற வகையில் வழங்கவுள்ளது.


தொலைக்காட்சியுடன் மட்டுமல்லாமல், FM தெரண, WWW.ADADERANA.LK இணையதளம், அத தெரண குறுஞ்செய்தி சேவை ஆகியவற்றின் ஊடாக மூன்று மொழிகளிலும் தேர்தல் தொடர்பான அனைத்து புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்குவதற்கு தயாராக உள்ளது.


மேலும், அத தெரணவின் FACEBOOK, YOUTUBE, TIKTOK மற்றும் X தளங்கள் மூலமும் தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகளை உங்களுக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.


அதன்படி, நாளை மாலை 6:00 மணி முதல் 'SRI LANKA DECIDES' விசேட தேர்தல் முடிவுகள் ஒளிபரப்புடன் நீங்கள் இணைந்து கொள்ளலாம்.


கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் முடிவுகளை வழங்கியது போலவே, இறுதி முடிவுகள் வரை அனைத்து தேர்தல் தகவல்களையும் பல ஊடகங்களின் ஊடாக உடனுக்குடன் வழங்குவதற்கு அத தெரண அனைத்து ஏற்பாடுகளையும் நிறைவு செய்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05