May 6, 2025 - 11:07 AM -
0
செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபைக்கு நிறைவேற்றுப் பணிப்பாளராக அறுபவமிக்க சந்தைப்படுத்தல் நிபுணரான சமித ஹேமச்சந்திர நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதே வேளை 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் வகையில் பிரதான செயற்பாட்டு அதிகாரி பதவிக்கு அவர் பதவி உயர்வு பெற்றுள்ளதாகவும் செலிங்கோ லைஃப் அறிவித்துள்ளது.
செலிங்கோ லைஃப் நிறுவனத்தில் 2000 ஆம் ஆண்டு வர்த்தக நாம முகாமையாளராக திரு. ஹேமச்சந்திர இணைந்ததுடன் பணிப்பாளராக நியமிக்கப்படும் வரை நிறுவனத்தில் பல சிரேஷ்ட முகாமைத்துவ பதவிகளை வகித்தார். ஆயுள் காப்புறுதித் துறையில் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக நாம கட்டமைப்பில் 25ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை அவர் சபைக்கு கொண்டு வருகிறார். அவர் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
2004 ஆம் ஆண்டில் செலிங்கோ லைஃப் நிறுவனமானது சந்தைத் தலைமைத்துவத்தை அடைந்தபோது சிரேஷ்ட முகாமைத்துவக் குழுவில் அவர் அங்கம் வகித்ததுடன் நிறுவனமானது அந்தத் தலைமைத்துவத்தை இன்றுவரை 21 ஆண்டுகளாகத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வருகின்றமை குறிப்படத்தக்கதாகும். மேலும், இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் (SLIM) செலிங்கோ லைஃப் நிறுவனமானது மூன்று தடவைகள் இலங்கையின் சிறந்த வர்த்தகநாமமாகவும், ஆறு தடவைகள் சிறந்த சேவை வர்த்தக நாமமாகவும் தேர்ந்தெடுக்கப்படுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ஐக்கிய ராஜ்யத்தின் பட்டய சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (CIM) உறுப்பினரும் (FCIM)) பட்டய சந்தைப்படுத்துநருமான திரு. சமித ஹேமச்சந்திர, வர்த்தகநாம முகாமைத்துவம், வாடிக்கையாளர் உறவு முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் மற்றும் மூலோபாய திட்டமிடல் ஆகியவற்றில் விரிவான நேரடி அனுபவத்தைக் கொண்டுள்ளார். செலிங்கோ லைஃப் நிறுவனத்திற்கான பல ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் பிரசாரங்களை வடிவமைத்தல், உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துவதில் அவர் நேரடியாக ஈடுபட்டுள்ளார். மேலும் திரு. சமித அவுஸ்திரேலியாவின் Western Sydney பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (MBA) பெற்றுள்ளார். இலங்கை காப்புறுதி சங்கத்தின் (IASL) சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை மன்றத்தின் முன்னாள் தலைவராகவும், SLIM வர்த்தகநாம சிறப்பு விருதுகளுக்கான நடுவர் குழுவில் பல ஆண்டுகளாக உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
அவர் தற்போது செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்வீசஸ் நிறுவனத்தின் பணிப்பாளராகவும், செலிங்கோ லைஃப்பின் துணை மற்றும் இணை நிறுவனங்களான சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ் பிஎல்சி (CDB) இன் நிறைவேற்றல்லாத பணிப்பாளராகவும் திகழ்கிறார். 2025 ஆம் ஆண்டில் தொடர்ந்து 19 வது ஆண்டாக மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக வாக்களித்தது, தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக 2023 இல் இலங்கையின் ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக தெரிவு செய்யப்பட்ட செலிங்கோ லைஃப் இலங்கையில் மிகவும் போற்றப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. 2023 இல் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) இல் பட்டய மேலாண்மைக் கணக்காளர் நிறுவனத்துடன் (CIMA) ஒத்துழைப்பு மற்றும் இரண்டிலும் இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமம் என்று பிராண்ட் ஃபைனான்ஸ் மூலம் தரவரிசைப்படுத்தப்பட்டது.
செலிங்கோ லைஃப் 37 வருடங்களில் 21 வருடங்களாக நாட்டின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனமாக இருந்து வருகிறது. அத்தோடு நடைமுறையில் உள்ள மற்றும் புதுமையான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்குகிறதுடன் காப்புறுதிதாரர்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஆபத்து தன்மையினை மட்டுப்படுத்தி நிறுவனம் பாதுகாப்பை வழங்குகின்றன.

