May 6, 2025 - 11:52 AM -
0
SLT-MOBITEL முன்னெடுத்திருந்த ‘Roam and Win’விசேட ஊக்குவிப்புத் திட்டத்தின் அதிர்ஷ்டசாலி வெற்றியாளருக்கு சகல செலவுகளுடனான தாய்லாந்து சுற்றுப் பயணத்தை பரிசாக வழங்கியிருந்தது. SLT-MOBITEL தலைமையகத்தில் இந்த மாபெரும் பரிசு வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவை கௌரவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தமது சர்வதேச பிரயாணங்களின் போது SLT-MOBITEL ரோமிங் திட்டங்களை செயற்படுத்தும் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தகைமை பெற்ற வாடிக்கையாளர்களிலிருந்து அதிர்ஷ்டசாலி தெரிவு, குலுக்கல் முறையில் மேற்கொள்ளப்பட்டு, மாபெரும் பரிசான, தாய்லாந்துக்கான சகல செலவுகளையும் ஈடு செய்யும் இருவருக்கான வெளிநாட்டு சுற்றுப் பயண வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
பயணம் செய்கையில் ஒப்பற்ற இணைப்பு வசதிகளை அனுபவிக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு பெறுமதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் SLT-MOBITEL இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. சர்வதேச மட்டத்தில் இணைப்பில் இருப்பதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு, SLT- MOBITEL இன் ரோமிங் திட்டங்கள் சிக்கனமானவையாகவும், வெகுமதிகளை வழங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தேசிய தகவல் தொடர்பாடல் தொழினுட்ப தீர்வுகள் வழங்குனர் எனும் வகையில், SLT-MOBITEL தொடர்ந்தும், வாடிக்கையாளர்களை மையப்படுத்திய புத்தாக்கங்கள், ஊக்குவிப்புகள் மற்றும் சேவைகளினூடாக முன்னிலையில் திகழ்வதுடன், வாடிக்கையாளர்கள் பெருமளவு அனுகூலங்களைப் பெறுவதை உறுதி செய்வதுடன், மேம்படுத்தப்பட்ட தொலைத்தொடர்பாடல் அனுபவங்களை பெறுவதையும் உறுதி செய்கிறது.

