May 6, 2025 - 12:35 PM -
0
வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு, தேசிய தொலைத்தொடர்பாடல் சேவைகள் வழங்குனர் SLT- MOBITEL விசேட சுகாதார முகாமை 2025 மே மாதத்தின் முதல் வாரத்தில் கம்பஹா SLT-MOBITEL பிராந்திய அலுவலக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 550 க்கும் அதிகமானவர்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்கியிருந்தது. “சம்பந்தியாவே தஹமி சத்காரய” எனும் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் சமூக, சூழல் மற்றும் ஆளுகை (ESG) அர்ப்பணிப்புகளின் பிரகாரம் இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக eChannelling, Sethma Hospitals, J.A Wimalasooriya opticians மற்றும் Parampara அகர்பத்திகள் ஆகியவற்றுடன் SLT-MOBITEL கைகோர்த்திருந்தது. இலவச குருதி மற்றும் நீரிழிவு பரிசோதனை, இலவச electrocardiogram (ECGs) பரிசோதனை, கண் பரிசோதனை, போஷாக்கு ஆலோசனை சேவைகள் மற்றும் பொது மருத்துவ ஆலோசனை வழங்கல்கள் போன்றன இதன் போது முன்னெடுக்கப்பட்டிருந்தன.
திறமைவாய்ந்த வைத்திய நிபுணர்கள் நாள் முழுவதும் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை உடனிருந்து, தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதுடன், முழுமையான பரிசோதனைகளையும் மேற்கொண்டனர். இந்த நிகழ்வு மிரிஸ்வத்த, யக்கல, உடுகம்பொல, மகேவிட, பெலும்மஹார, கணேமுல்ல மற்றும் கம்பஹா நகரத்தைச் சேர்ந்த மக்களுக்கு சேவை செய்தது. அவர்களில் பலர் வழக்கமான சுகாதார சேவைகளை பெறுவதில் மட்டுப்படுத்தப்பட்ட அணுகலைக் கொண்டுள்ளவர்களாகும்.
நேரடியாக முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுக்கு அப்பால் நன்மைகளை விரிவுபடுத்துவதற்காக, eChannelling மூலம் வைத்திய ஆலோசனைக்களை பெற்றுக் கொடுப்பதற்கு டிஜிட்டல் அணுகலையும் SLT-MOBITEL செயல்படுத்தியது. குறித்த தினத்தில் மருத்துவர்கள் ஒன்லைன் ஆலோசனைகளுக்காக செயலாற்றியிருந்தனர். இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே மருத்துவ நிபுணர்களுடன் இணைந்தனர்.
சமூக பொறுப்புக்கூரல் மற்றும் சமூகத்துக்கு மீள வழங்கல் என்பதில் கவனம் செலுத்தும் நிறுவனம் எனும் வகையில் SLT-MOBITEL இனால், முன்னெடுக்கப்பட்ட சுகாதார முகாமினூடாக, சமூகத்தாருக்கு சுகாதாரத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, தமது சுகாதார நலனுக்கு முன்னுரிமையளிக்க தனிநபர்களை தூண்டுவதாக அமைந்திருந்தது.
புதுமையான தொழில்நுட்பத்தினுடன் சுகாதார சேவைகள் எவ்வாறு ஒன்றிணைந்து மக்களின் வாழ்வில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், நிறுவன சமூகப் பொறுப்பு மற்றும் சமூக நல்வாழ்வுக்கான SLT-MOBITEL இன் பரந்த உறுதிமொழியின் ஒரு பகுதியாகவும் இந்த நிகழ்வு அமைந்தது.

