வணிகம்
அமானா லைஃப் காப்புறுதிதாரர்கள் தமது தங்க முதலீட்டு நிதியத்திலிருந்து 19% வருமதியை அனுபவிக்கின்றனர்

May 6, 2025 - 02:03 PM -

0

அமானா லைஃப் காப்புறுதிதாரர்கள் தமது தங்க முதலீட்டு நிதியத்திலிருந்து 19% வருமதியை அனுபவிக்கின்றனர்

உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை பதிவு செய்துள்ள நிலையில், பல முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதில் நாட்டம் காண்பித்து வரும் நிலையில், இலங்கையர்களுக்கும் காப்புறுதியினூடாக, தங்கத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை அமானா லைஃப் இன்சூரன்ஸ் வழங்க முன்வந்துள்ளது. 

வாடிக்கையாளர்களுக்கு சகல ஆயுள் காப்புறுதி தீர்வுகளிலும், பிரத்தியேகமான தங்க முதலீட்டு நிதியத்தை அணுகும் வாய்ப்பை வழங்கும் இலங்கையின் ஒரே ஆயுள் காப்புறுதி வழங்குனராக அமானா லைஃப் இன்சூரன்ஸ் திகழ்கிறது. அதில் ஓய்வூதியம், கல்வி மற்றும் சுகாதார திட்டங்கள் போன்றன அடங்கியுள்ளன. நிதிசார் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய ரீதியில் அதிகளவு பெறுமதி வாய்ந்த சொத்தின் நீண்ட கால உறுதித் தன்மை ஆகியவற்றுடன், இலங்கையர்களுக்கு தங்கத்தில் முதலீடு செய்து, முதிர்வின் போது தங்கத்தைப் பெற்றுக் கொள்ளும் பிரத்தியேகமான வாய்ப்பை இது வழங்கியுள்ளது. 

2025 மார்ச் 31 ஆம் திகதியன்று, தங்க முதலீட்டு நிதியம் 12 மாத வருமதியாக 19% எனும் உயர் தொகையை வழங்கியிருந்தது. தங்க நிதிய முதலீட்டு தெரிவை தமது செல்வ திரட்டு திட்டமிடல் மூலோபாயத்தில் தெரிவு செய்திருந்த காப்புறுதிதாரர்களுக்கு உறுதியான வருமதிகளை வழங்கியிருந்தது. 

உங்கள் பிள்ளையின் கல்வி, உங்களின் ஓய்வூதியம் அல்லது நீண்ட கால செல்வத் திரட்டு என நீங்கள் ஏதேனும் விடயத்தை திட்டமிடுகின்றீர்களாயின், அமானா லைஃப் இன்சூரன்ஸ் உங்களுக்கு இலங்கையின் மிகவும் பரந்த மற்றும் உயர் வினைத்திறன் வாய்ந்த முதலீட்டு பிரிவுகளை வழங்குகிறது. அதில் Protected Multiple Fund, Stable Multiple Fund, Growth Multiple Fund, Volatile Multiple Fund, Bullion Multiple Fund மற்றும் பெருமளவு வரவேற்பைப் பெற்ற தங்க முதலீட்டு நிதியம் (Gold Investment Fund) ஆகியன அடங்கியுள்ளன. இவை ஒவ்வொன்றும், வெவ்வேறு நிதிசார் இலக்குகளுக்கும், இடர் கோவைகளுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

நிதியத்தின் வினைத்திறனான செயற்பாடு தொடர்பில் அமானா லைஃப் இன்சூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கெஹான் ராஜபக்ச கருத்துத் தெரிவிக்கையில், “சர்வதேச ரீதியில் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை உயர்வடைந்து செல்கின்றமையினால், புத்தாக்கமான, நீண்ட-கால அடிப்படையிலான முதலீட்டு தெரிவுகளை பெற்றுக் கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டுள்ளது. 

எமது தங்க முதலீட்டு நிதியத்தின் உறுதியான பெறுபேறுகளினூடாக, எமது காப்புறுதிதாரர்களுக்கு நிலைத்திருக்கும் பெறுமதியை ஏற்படுத்துவதற்கான எமது ஆழமான அர்ப்பணிப்பு பிரதிபலிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடந்த கால பெறுபேறுகள், எதிர்கால பெறுபேறுகளுக்கான எடுத்துக்காட்டாக அமையாது என்பதை எமது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக நாம் நினைவூட்டுவதுடன், நபரின் நிதிசார் இலக்குகள் மற்றும் சந்தைத் தோற்றம் ஆகியவற்றுடன் பொருந்தும் வகையில் சகல முதலீடுகளும் அமைந்திருக்க வேண்டும் என்பதையும் நினைவூட்டுகிறோம்.” என்றார். 

இலங்கையின் பெருமளவு விருதுகளை வென்ற காப்புறுதிக் கம்பனியான அமானா லைஃப் இன்சூரன்ஸ், தூர நோக்கு, புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளருக்கு முன்னுரிமை வழங்கும் மனநிலையுடன் இயங்குவதுடன் – ஒவ்வொரு இலங்கையருக்கும் தமது எதிர்காலத்தை நம்பிக்கை மற்றும் தெளிவுடன் பேணிக் கொள்ள வழியமைக்கிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05