செய்திகள்
ஜனாதிபதி நாடு திரும்பினார்

May 6, 2025 - 04:23 PM -

0

ஜனாதிபதி நாடு திரும்பினார்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வியட்நாமுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, இன்று (06) பிற்பகல் வியட்நாம் அரசாங்கத்தின் சிறப்பு விமானம் மூலம் இலங்கைக்கு திரும்பினார்.

 

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவோங் (Luong Cuong) அவர்களின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டார்.
 
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவோங் உடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.
 
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பல ஒப்பந்தங்கள் இதன்போது கையெழுத்திடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
Comments
0

MOST READ
01
02
03
04
05