May 6, 2025 - 06:13 PM -
0
2025 உள்ளூராட்சித் தேர்தலுக்கான 'SRI LANKA DECIDES ELECTION NIGHT' தேர்தல் முடிவுகளை வழங்கும் விசேட நேரடி ஒளிபரப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பான இறுதி அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் கொண்டுவருவதற்கு தெரண ஊடக வலையமைப்பு இப்போது அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
'SRI LANKA DECIDES ELECTION NIGHT' என்ற விசேட தேர்தல் ஒளிபரப்பு மூலம், நவீன தொலைக்காட்சி தொழில்நுட்பத்துடன், மாறி மாறி வரும் தேர்தல் முடிவுகளின் உணர்வை உங்களுக்கு கொண்டு வர தயாராக உள்ளது.
தெற்காசியாவின் மிகப்பெரிய செய்தி அறையிலிருந்து, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் கிராஃபிக் அனிமேஷன் முறைகளைப் பயன்படுத்தி, வெளிநாட்டு நிபுணர் குழுக்களின் தொழில்நுட்ப ஆதரவுடன், சர்வதேச தரத்திலான தொலைக்காட்சி அனுபவத்தை உங்கள் வீட்டுத் திரையில் ஒப்பற்ற வகையில் வழங்கவுள்ளது.
தொலைக்காட்சியுடன் மட்டுமல்லாமல், FM தெரண, WWW.ADADERANA.LK இணையதளம், அத தெரண குறுஞ்செய்தி சேவை ஆகியவற்றின் ஊடாக மூன்று மொழிகளிலும் தேர்தல் தொடர்பான அனைத்து புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்குவதற்கு தயாராக உள்ளது.
மேலும், அத தெரணவின் FACEBOOK, YOUTUBE, TIKTOK மற்றும் X தளங்கள் மூலமும் தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகளை உங்களுக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

