May 7, 2025 - 08:52 AM -
0
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
அக்கரைப்பற்று மாநகர சபையில் தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய காங்கிரஸ் (NC) - 7,902 வாக்குகள் - 11 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 3,584 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 3,133 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) - 2,066 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 969 வாக்குகள் - 1 உறுப்பினர்