May 7, 2025 - 09:11 AM -
0
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாதிகளின் 9 நிலைகளை நள்ளிரவில் அதிரடியாக இந்திய ராணுவம் அழித்தது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 4 பயங்கரவாத முகாம்கள், பாகிஸ்தானில் உள்ள 5 முகாம்கள் அழிக்கப்பட்டன. பஹவல்பூர், தெஹ்ரா கலான், கோட்லி, முசாபராபாத்தில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கர அமைப்புகளின் முகாம் அழிக்கப்பட்டன.
இந்த நிலையில் ரஜோரி மாவட்டத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

