May 7, 2025 - 11:40 AM -
0
உலகின் பணக்கார நடிகர் ஒரு எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 55 வயதில், அவரது சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலர். அதாவது, பிரபல நடிகர்களான டாம் குரூஸ், டுவைன் ஜான்சன், ஷாருக்கான் மற்றும் ஜெர்ரி சீன்ஃபீல்ட் ஆகியோரை விட இந்த நடிகருக்கு சொத்து மதிப்பு அதிகமாக உள்ளது. யார் அவர் தெரியுமா?
உலகின் மிகப் பெரிய பணக்கார நடிகர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ஆனாலும், அவரின் சொத்து மதிப்பு உயர்ந்துக் கொண்டே செல்கிறது. டாம் குரூஸ், ஜெர்ரி சீன்ஃபீல்ட், டுவைன் ஜான்சன், ஷாருக்கான் போன்ற பிரபல நடிகர்களை அவர் சொத்து மதிப்பில் விஞ்சி உள்ளார் என்று ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட தகவலின்படி தெரியவந்துள்ளது.
ஃபோர்ப்ஸ் 2025 பட்டியல்படி, உலகின் பணக்கார நடிகர் டைலர் பெர்ரி ஆவார். இவரின் சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலர்கள். அதேநேரம், ஜெர்ரி சீன்ஃபீல்ட் ($1.1 பில்லியன்), டாம் குரூஸ் ($800 மில்லியன்), ஷாருக் கான் ($770 மில்லியன்) மற்றும் டுவைன் ஜான்சன் ($700 மில்லியன்) சொத்து மதிப்பு கொண்டுள்ளனர்.
டைலர் பெர்ரி பல திரைப்படங்களில் நடித்துள்ளதோடு, இயக்கவும் செய்துள்ளார். அதேபோல் நாடகங்களிலும் நடித்திருக்கிறார். எனினும், அவரின் நடிப்பில் பிரபலமாக அறியப்பட்டது "மேடியா" வெப் சீரிஸ் தான். இந்த சீரிஸ் உலகளவில் 660 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூல் செய்தது.
உலகெங்கிலும் உள்ள 3,000 பில்லியனர்களைக் கொண்ட ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் டைலர் பெர்ரி 2,356 வது இடத்தைப் பிடித்திருக்கிறார். எனினும், டைலர் பெர்ரி கடைசியாக 2002 ஆம் ஆண்டு வெளியான 'எ மேடியா ஹோம்கமிங்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. எனினும், இயக்குநராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.