வணிகம்
துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) பிரதிநிதி அலுவலகத்தைத் திறக்கவுள்ள இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி

May 8, 2025 - 08:19 AM -

0

துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) பிரதிநிதி அலுவலகத்தைத் திறக்கவுள்ள இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி

கொமர்ஷல் வங்கியானது மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியா (MEASA) பிராந்தியத்தில் முன்னணி உலகளாவிய நிதியியல் மையமாக திகழும் துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தைத் திறப்பதன் மூலம் தனது சர்வதேச தடத்தை கணிசமாக விரிவுபடுத்த உள்ளது. 

இந்த சமீபத்திய முன்னேற்ற நடவடிக்கையை அறிவித்துள்ள இலங்கையின் மிகப்பாரிய தனியார் துறை வங்கியான கொமர்ஷல் வங்கி DIFC இல் பிரதிநிதி அலுவலகத்தை இயக்குவதற்கான துபாய் நிதியியல் சேவைகள் ஆணைக்குழுவின் (DFSA) உரிமத்தை ஏற்கனவே பெற்றுள்ளதாகவும், விரைவில் செயல்பாடுகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

இந்தப் பிரதிநிதி அலுவலகமானது இலங்கையின் பிரதம பங்குதாரர்களை உள்ளடக்கிய நிலையிலும் அதேவேளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) செயல்பாடுகளைக் கொண்ட பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவிலும் பிராந்தியத்தில் வங்கியின் வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தளத்திற்கான தொடர்பு புள்ளியாக செயற்படவுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.கொமர்ஷல் வங்கியானது பங்களாதேஷில் 20 கிளைகள், மியான்மாரில் ஒரு நுண் நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் ஒரு முழுமையான Tier I வங்கி ஆகியவற்றைக் கொண்டுள்ள நிலையில் ஏற்கனவே இலங்கை வங்கிகளின் மத்தியில் பரந்த சர்வதேச தடத்தைக் கொண்டுள்ளது, இந்த புதிய அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் தலைவர் திரு. ஷர்ஹான் முஹ்சீன், கொமர்ஷல் வங்கியானது துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் தனது பிரசன்னத்தை மேற்கொண்ட முதலாவது இலங்கை வங்கியாக தன்னை பதிவு செய்த நிலையில் வங்கி மீண்டும் ஒருமுறை தனது முன்னிலை ஸ்தானத்தை உறுதி செய்துள்ளது. நமது மூலோபாய தொலைநோக்குப் பார்வையையும், நாம் இயல்பாகவே அடையக்கூடிய வளர்ச்சியையும் அடைய, நமது உலகளாவிய தடத்தை விரிவுப்படுத்துவது அவசியமாக உள்ளதுடன் மேலும் இது வங்கி அதன் வாடிக்கையாளர்களின் நோக்கங்களையும் இலட்சியங்களையும் ஆதரிக்க உதவும். எனவே, DIFC யில் ஒரு பிரதிநிதி அலுவலகத்தைத் திறப்பது கொமர்ஷல் வங்கியின் சர்வதேச தடத்தை விரிவுபடுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாகும். 

சர்வதேச அரங்கில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எமது விருப்பத்தில் இது ஒரு முக்கியமானபடியாக திகழ்வதுடன் மேலும் எதிர்கால விரிவாக்கத்திற்கு ஒரு சிறந்த அடித்தளத்தை வழங்குகிறது, என்று கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க கூறினார். மேலும் கூறுகையில் இது வங்கியை பல்வேறு மூலோபாய நலன்களுடன் ஒரு முன்னணி உலகளாவிய நிதியியல் மையமாக நிலைநிறுத்துகிறது. துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் ஒரு நிலையத்தை நிறுவுவதன் மூலம், உலகளாவிய வர்த்தக இணைப்பை ஆதரிக்கும் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தளத்தை வங்கி அணுகக்கூடியதாக இருக்கும். இது எல்லை தாண்டிய வாடிக்கையாளர்களை ஆதரிக்கும் எமது திறனை மேம்படுத்துவதுடன் மேலும் மத்திய கிழக்கில் நீண்டகால வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 

கொமர்ஷல் வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதலாவது இலங்கை வங்கியாகும். மற்றும் கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) துறைக்கு மிகப்பெரிய கடனுதவி வழங்குவதோடு, டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது. அத்துடன் இலங்கையின் முதலாவது 100% கார்பன் நடுநிலை வங்கியாகும். கொமர்ஷல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயல்படுத்துகிறது, மேலும் இலங்கை வங்கிகளுக்கிடையில் பரந்த சர்வதேச தடத்தைக் கொண்டுள்ளது, பங்களாதேஷில் 20 நிலையங்கள், மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் பெரும்பான்மையுடன் கூடிய முழு அளவிலான Tier I வங்கி ஆகியவற்றை கொண்டு திகழ்கிறது.வங்கியின் முழு உரித்தான துணை நிறுவனமாக CBC ஃபினான்ஸ் லிமிடெட் திகழ்கிறது. வங்கியானது அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பரந்த அளவிலான நிதிச் சேவைகளையும் வழங்குகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05