செய்திகள்
சம்பிக்க ரணவக்கவின் மனு தள்ளுபடி

May 8, 2025 - 01:08 PM -

0

சம்பிக்க ரணவக்கவின் மனு தள்ளுபடி

தாம் உள்ளிட்ட பிரதிவாதிகள் மூன்று பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் நடந்த வாகன விபத்து தொடர்பான சாட்சிகளை மறைத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் சட்டமா அதிபர் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தார். 

இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் நீதியரசர் காமினி அமரசேகர ஆகியோரின் இணக்கத்துடன் உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொடவால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

Comments
0

MOST READ
01
02
03
04
05