செய்திகள்
2 கோடி ரூபாய் கொள்ளை - சந்தேகநபர் கைது

May 9, 2025 - 07:34 AM -

0

2 கோடி ரூபாய் கொள்ளை - சந்தேகநபர் கைது

20,840,000 ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். 

03.05.2025 அன்று, சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவில் துப்பாக்கியை காண்பித்து மிரட்டி இவ்வாறு 2 கோடியே 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டிருந்தன. 

இந்த சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

அதன்படி, நேற்று (08) காலை கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஹேன சந்தியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். 

சந்தேக நபர் கலகெடிஹேன பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

சந்தேக நபரிடம் மேற்கொண்ட மேலதி விசாரணைகளில், ​​கொள்ளையிடப்பட்டிருந்த மோதிரம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05