May 9, 2025 - 09:11 AM -
0
கார்பன் கணக்கியல் நிதிகளுக்கான கூட்டாண்மையில் உத்தியோகப்பூர்வமாக உறுப்புரிமை பெற்றுக்கொண்டதை அறிவிப்பதில் DFCC வங்கி மகிழ்ச்சியடைகிறது. இது நிலைபேறுமிக்க நிதி, வெளிப்படைத்தன்மை மற்றும் காலநிலை பொறுப்புக்கூறலுக்கான வங்கியின் நீடித்த அர்ப்பணிப்பினை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.
கார்பன் கணக்கியல் நிதிகளுக்கான கூட்டாண்மையில் கையெழுத்திட்ட நிறுவனம் என்ற ரீதியில், உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகளின் வளர்ச்சி மற்றும் செயற்படுத்தலுக்கு DFCC வங்கி தீவிரமாக பங்களிக்கும். இந்த முறைகள், வங்கியின் கடன் மற்றும் முதலீட்டு பணிகளுடன் இணைக்கப்பட்ட பச்சைவீட்டு வாயு உமிழ்வு பற்றிய தகவல்களை அளவிடவும் பகிர்ந்து கொள்ளவும் உதவும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான வங்கியின் பயணத்தில் இது ஒரு முக்கியமான படியாகும். அதன் முக்கிய வணிக நடவடிக்கைகளில் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை இணைத்துக்கொள்வதற்கான வங்கியின் உறுதிப்பாட்டையும் இது வெளிப்படுத்துகின்றது.
இவ்விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த வங்கியின் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியான ஷமிந்திர மார்சலின், “கார்பன் கணக்கியல் நிதிகளுக்கான கூட்டாண்மையல் நாம் உறுப்புரிமை பெற்றுள்ளமையானது, எமது பயணத்தின் ஒரு முக்கியமான கட்டத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு ஊக்குவிக்கும் ஒரு படிநிலையாகும். இலங்கை குறைந்த கார்பன் வெளியீட்டை நோக்கிய எதிர்கால பயணத்தை நோக்கி நகரும்போது, DFCC வங்கியானது காலநிலை பொறுப்பை அதன் பணியின் முக்கிய பகுதியாக சேர்த்துக்கொள்வதில் பெருமையடைகின்றது. இந்த உலகளாவிய கூட்டாண்மை மூலம், எமது நிதி உதவியின் மூலமான செயற்பாடுகளின் சுற்றுச்சூழல் விளைவுகளை எவ்வாறு அளவிடுகிறோம் என்பதை மேம்படுத்துவோம். உண்மையான மாற்றத்தைக் கொண்டுவரவும், எதிர்கால சந்ததியினருக்கு நியாயமான மற்றும் நிலையான பொருளாதாரத்தை ஆதரிக்கவும் நாம் உதவுவோம்.
உலகெங்கிலும் உள்ள ஏனையோருடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், எமது நிதியியல் நிலைமைகள் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை நன்கு புரிந்து கொள்ள முடியும். அத்தோடு, சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தவும், எதிர்கால தலைமுறையினருக்கான நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான எமது வல்லமையை வலுப்படுத்துவோம்.
கார்பன் கணக்கியல் நிதிகளுக்கான கூட்டு என்பது ஆறு கண்டங்களைச் சேர்ந்த 500இற்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களின் உலகளாவிய குழுவாகும். இவை, நிதித் துறைக்குள் வெளிப்படையான, சீரான மற்றும் ஒப்பிடக்கூடிய வழியில் உமிழ்வுகள் அளவிடப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த, ஒரு பொதுவான குறிக்கோளுடன் ஒன்றித்து செயற்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம், பச்சைவீட்டு வாயு (GHG) உமிழ்வு பற்றிய தகவல்களை தெளிவாகப் பகிர்வதற்கு நிபுணர் உதவி, பயிற்சி மற்றும் நன்கு அறியப்பட்ட உலகளாவிய விதிகளின் பயன்பாடு ஆகியவற்றை உறுப்பினர்கள் பெறுகின்றார்கள். உலகெங்கிலும் உள்ள வங்கிகளும் நிறுவனங்களும் IFRS S2 போன்ற புதிய தரங்களைப் பின்பற்றுவதால் இது முக்கியமானது.
கார்பன் கணக்கியல் நிதிகளுக்கான கூட்டாண்மையில் DFCC வங்கியின் பங்கேற்பு, அதன் வளர்ந்து வரும் நிலையான நிதி முயற்சிகளை உள்ளடக்குகின்றது. இது ஒரு நோக்கத்தால் இயக்கப்படும் மற்றும் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட நிதி நிறுவனமாக அதன் நிலையை வலுப்படுத்துகின்றது. இது ஒரு பசுமையான மற்றும் நெகிழக்கூடிய இலங்கையை உருவாக்குவதற்கு உறுதிபூண்டுள்ளது.
DFCC வங்கி பற்றிய அறிமுகம்
1955ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மற்றும் 1956ஆம் ஆண்டில் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட DFCC வங்கி பி.எல்.சி.யானது, இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகும். இலங்கையின் மத்திய வங்கியால் ஒழுங்குறுத்தப்பட்டு, Fitch Ratings தரப்படுத்தல் நிறுவனத்தால் ஏ தரத்திற்கு மதிப்பிடப்பட்ட இந்த வங்கி, திறைசேரி, முதலீடு மற்றும் வர்த்தக நிதித் தீர்வுகளுடன் சில்லறை, கூட்டுறவு மற்றும் SME வங்கிச் சேவைகள் என பரந்தளவான சேவைகளை வழங்குகின்றது. வாடிக்கையாளர்களை நோக்கமாகக் கொண்ட மற்றும் நிலையான புத்தாக்க நடவடிக்கைகளுடன், DFCC வங்கி தடையற்ற மற்றும் பாதுகாப்பான வங்கி அனுபவங்களை வழங்குகிறது. இதில் DFCC MySpace போன்ற டிஜிட்டல் தளங்களும், 138 கிளைகளும், LankaPay வலையமைப்பு வழியாக 5,500இற்கும் மேற்பட்ட தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்தக்கூடிய வசதியும் உள்ளடங்கும்.
DFCC வங்கியானது, நிலையான நிதி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி ஆகிய முயற்சிகளில் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக உள்ளதோடு, சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைப்பதற்கும் நீண்டகால பொருளாதார மீள்தன்மையை வளர்ப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது.

