May 9, 2025 - 09:24 AM -
0
NDB வங்கியானது அண்மையில் கொழும்பு பிஷப் கல்லூரியுடன் இணைந்து, அதன் முன்னோடி இளைஞர் வங்கித் தயாரிப்பான NDB Pixel மூலம் 13 முதல் 17 வயது வரையிலான மாணவர்களிடையே நிதியியல் கல்வியறிவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு பிரத்தியேக விழிப்புணர்வு முயற்சியை ஆரம்பித்தது. NDB வங்கியின் ஈடுபாட்டுடன் கூடிய இந்த முயற்சியானது அதிகரித்து வரும் டிஜிட்டல் நிதியியல் சூழலில் அடுத்த தலைமுறையினர் தேவையான கருவிகள் மற்றும் அறிவைக் கொண்டு தம்மை விருத்தி செய்து கொள்வதில் NDB இன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது.
NDB வங்கியானது இந்த ஒத்துழைப்பினை வெளிப்படுத்தும் வகையில் பிஷப் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்காக சிறப்பாக வடிவமைத்து நடத்திய விழிப்புணர்வு அமர்வு இருந்தது. இந்த விழிப்புணர்வு அமர்வில் பதின்ம வயது மாணவர்களுக்கான NDB Pixel டீன் கணக்கின் நன்மைகள் தொடர்பாக வங்கியினால் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இந்தக் கணக்கானது பதின்ம வயது பருவத்தினர் நிதிப் பொறுப்பை நோக்கி முதலாவது அடியை எடுத்து வைக்க எவ்வாறு உதவுகிறது என்பதையும், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இந்த கணக்கு தொடர்பான SMS அறிவுறுத்தல்கள் மற்றும் இலத்திரனியல் -அறிக்கைகள் மூலம் விவேகமான மேற்பார்வையை மேற்கொள்ள வழங்கப்படும் அனுமதி பற்றியும் சிறப்பாக எடுத்தியம்பியது.
NDB வங்கியின் NDB Pixel கணக்கானது 13 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினருக்காக பிரத்தி யேகமாக வடிவமைக்கப்பட்ட முதல் வகை, டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்படும் கணக்காகும். அதே வேளை Pixel என்பது வெறுமனே சேமிப்புக் கணக்கு என்பதை விட, நிதியியல் கல்வியறிவுக்கான ஒரு படிக்கல்லாக திகழ்வதுடன் டிஜிட்டல் மூலம் ஸ்மார்ட் சேமிப்பு மற்றும் செலவு பழக்கங்களை ஊக்குவிக்கிறது. NEOS மொபைல் வங்கியியல் மற்றும் பிரத்தியேக டெபிட் அட்டை மூலம், பதின்ம வயதினர் பாதுகாப்பான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் தமது பணத்தை நிர்வகிப்பதில் நேரடி அனுபவத்தைப் பெற முடியும்.
இந்நிலையில் NDB வங்கியின் மேற்படி முயற்சியானது பிஷப் கல்லூரிக்கு பிரத்தியேகமான ஒரு தனித்துவமான சலுகையாக, மாணவர்கள் தனிப்பயனாக்கப்பட்ட NDB Pixel டெபிட் அட்டைகளைப் பெறும் வாய்ப்பையும் அறிமுகப்படுத்தியதுடன் இது இளம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ஈடுபாட்டுடன் கூடிய மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வங்கி அனுபவத்தை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
NDB வங்கியானது இந்த முயற்சியின் மூலம், இளைஞர்களை வலுப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் இருக்கும் தனது பங்கை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியதுடன் இதன் மூலம் சிறு வயதிலிருந்தே நிதியியல் கல்வி மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துகிறது. அத்துடன் இளம் இலங்கையர்கள் Pixel கணக்கின் மூலம் தகவலறிந்த, பொறுப்பான நிதிதொடர்பான தீர்மானங்களை மேற்கொள்பவர்களாக தம்மை மாற்றிக்கொள்வதற்கான வழியினை வழங்குகிறது.

