May 9, 2025 - 04:46 PM -
0
இலங்கையில் மிகவும் நேசிக்கப்படுகின்ற பான வகை வர்த்தகநாமமான எலிபன்ட் ஹவுஸ், புகழ்பூத்த கிரிக்கெட் பாரம்பரியத்தைக் கொண்ட சர்வதேச விளையாட்டு வர்த்தகநாமமான ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடன் அதன் உத்தியோகபூர்வ காபனேற்றம் செய்யப்பட்ட பான வகை கூட்டாளராக கைகோர்த்துள்ளமை குறித்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அனைத்து இல்லங்களிலும் உச்சரிக்கப்படுகின்ற, மறக்க முடியாத சுவைக்குப் பெயர்பெற்றுள்ள ஒரு நாமமும், ஒப்பற்ற விளையாட்டு உணர்வுக்கு அடையாளமாகத் திகழும் மற்றொரு நாமமும் தலைமுறை தலைமுறையாக இலங்கை மக்களின் உள்ளங்களை கவர்ந்துள்ள நிலையில், தற்போது மகத்தான இக்கூட்டாண்மையை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. இக்கூட்டாண்மை குறித்து அறிவிப்பை வெளியிடும் முகமாக, தேசிய அணியின் வீரர்கள் பங்கேற்றிருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடன் இணைந்து கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் எலிபன்ட் ஹவுஸ் ஏற்பாடு செய்திருந்தது. ஐக்கியம் மற்றும் பேரார்வம் ஆகிய உணர்வுகளை இது எவ்வாறு வெளிக்கொண்டு வரவுள்ளது என்பதை இதன் மூலமாக எடுத்துக்காட்டியுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒத்துழைப்பின் மூலமாக, ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஏற்பாட்டில் இலங்கையில் இடம்பெறுகின்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தின் போதும் தனது பான வகைகளை பிரத்தியேகமாக வழங்குகின்ற மற்றும் விற்பனை உரிமைகளை எலிபன்ட் ஹவுஸ் அனுபவிக்கும். ஆரவாரம் நிறைந்த மைதானம், வீரர்களின் உடமைகள் வைக்கப்படுகின்ற அறைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான பிரத்தியேக பார்வையாளர் கூடங்கள் என, புத்துணர்ச்சியளிக்கும் எலிபன்ட் ஹவுஸ் பான வகை தற்போது கிரிக்கெட் அனுபவத்தின் உள்ளார்ந்த அங்கமாக மாறியுள்ளது.
“எமது தேசத்தில் ஐக்கியத்தை வளர்க்கும் ஒரு விளையாட்டில் அங்கம் வகித்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட் உடன் கைகோர்ப்பதையிட்டு நாம் பெருமையடைகின்றோம்,” என்று எலிபன்ட் ஹவுஸ் நிறுவனத்தின் ஜோன் கீல்ஸ் நுகர்வோர் உணவுகள் பிரிவின் தலைவர் தமிந்த கம்லத் அவர்கள் குறிப்பிட்டார். “இந்த அனுசரணையானது வெறுமனே விளம்பரத்தை மாத்திரம் இலக்காகக் கொண்ட ஒன்று அல்ல, இது பேரார்வம், பெருமை மற்றும் ரசிகர்கள் என அனைத்தையும் முக்கிய தருணங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் பாடசாலை மட்ட சுற்றுப்போட்டிகள் மற்றும் அடிமட்ட அபிவிருத்திக்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ள எலிபன்ட் ஹவுஸ், இக்கூட்டாண்மையினூடாக நீண்ட காலமாக கிரிக்கெட்டுக்கு அது வழங்கி வந்துள்ள ஆதரவை மேலும் வலுப்படுத்தியுள்ளது. விளம்பர அடையாளப்படுத்தல்கள், டிஜிட்டல் ஊடகங்கள், மற்றும் மைதானத்தினுள் இடம்பெறுகின்ற விளம்பரப்படுத்தல் செயல்பாடுகள் என பிரபல்யத்திற்கான விசாலமான வாய்ப்பினை இந்த மூலோபாய கூட்டாண்மை வழங்குவதுடன், தேசத்தின் பெருமைமிக்க தருணங்களைக் கொண்டாடும் ரசிகர்களுடன் இந்த வர்த்தகநாமம் உணர்வுபூர்வமான பிணைப்பை ஆழமாக்குவதற்கும் வழிவகுக்கின்றது. ரசிகர்களுடன் ஈடுபாடுகளை வளர்க்கும் பிரத்தியேகமான ஊக்குவிப்புப் பிரச்சாரங்களை எலிபன்ட் ஹவுஸ் ஆரம்பிக்கவுள்ளதுடன், மகத்தான விளைவுகளை ஏற்படுத்தவல்ல சந்தைப்படுத்தல் முயற்சிகளுக்கு வீரர்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளவுள்ளது.
“எம்முடன் இணைந்து கொள்ளும் எலிபன்ட் ஹவுஸ் நிறுவனத்தை நாம் மனமார வரவேற்பதுடன், எமது கிரிக்கெட் பயணத்தில் இத்தகைய கூட்டாண்மைகள் எமக்கு உதவியாக அமைந்துள்ள நிலையில், இந்த கூட்டாண்மை மிகவும் முக்கியமானது. இக்கூட்டாண்மையினூடாக, தான் அடைந்து கொள்ள விரும்புகின்ற பலனை இந்த பான வகை வர்த்தகநாமம் பெற்றுக்கொள்ளும் என நாம் திடமாக நம்புகின்றோம்,” என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஆஷ்லி டி சில்வா அவர்கள் குறிப்பிட்டார்.
வர்த்தகநாமத்தின் தரம், நம்பகம், மற்றும் சமூகம் ஆகிய விழுமியங்களை இக்கூட்டாண்மை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், போட்டி நிறைந்த சந்தையில் தனது ஸ்தானத்தை மேலும் ஸ்திரப்படுத்தி, கிரிக்கெட் உலகில் அதன் வலுவான பாரம்பரியத்தைக் கட்டியெழுப்புகின்றது. இக்கூட்டாண்மை மூலமாக, கிரிக்கெட் அனுபவத்தின் ஒவ்வொரு கணத்திலும் தமது இருப்பினை வலுவாக நிலைநிறுத்தியவாறு, ரசிகர்கள் அனைவருக்கும் முற்றிலும் புதிய வழிமுறையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கு எலிபன்ட் ஹவுஸ் மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஆகியன தயாராகவுள்ளன.
இக்கூட்டாண்மை 2027 மார்ச் 31 வரை தொடரவுள்ளதுடன், எலிபன்ட் ஹவுஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் ஒரு புதிய இனிங்ஸின் ஆரம்பத்தையும் குறித்து நிற்கின்றது. கிரிக்கெட் ரசிகர்களுக்கும், நுகர்வோருக்கும் ஒப்பற்ற அனுபவத்திற்கான வாக்குறுதியை வழங்குவதில் புதிய பாதையை வகுத்துள்ளது.

