சினிமா
நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்

May 10, 2025 - 09:53 PM -

0

நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்

நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி புற்றுநோய் பாதிப்பால் இன்று காலமானார். 

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக இருந்தவர் சூப்பர்குட் சுப்பிரமணி. (சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைக்கப்பட்டார்). 

இவர் பரியேறும் பெருமாள், காலா, பிசாசு, ரஜினி முருகன், ஜெய் பீம், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றிருந்தார். 

2024-ல் வெளியான பரமன் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தவர் அதன்பின் புற்றுநோய் பாதிப்பால் சில மாதங்களாக சென்னை ராஜீவ்காந்தி அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில், நோயின் தீவிரத்தால் இன்று வைத்தியசாலையிலேயே உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05