May 11, 2025 - 05:45 PM -
0
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் இதுவரையில் தகவல் வௌியாகவில்லை.
வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கிலோமீற்றர் மேற்கே 89 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் மியன்மார் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

