செய்திகள்
கள்ளக்காதலியால் ஒருவர் கொலை

May 12, 2025 - 12:34 PM -

0

கள்ளக்காதலியால் ஒருவர் கொலை

பேருவளை - வலதர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்தார். 

நேற்று (11) இரவு இந்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த ஒருவர் விழுந்து கிடப்பதாக பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று அவரை மீட்டு உடனடியாக பேருவளை வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

எனினும் காயமடைந்த நபர் இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து, கள்ளக்காதலியால் கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், தெரியவந்துள்ளது. 

உயிரிழந்தவர் வலதர, பேருவளை பகுதியைச் சேர்ந்த 38 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

42 வயதுடைய சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05