May 12, 2025 - 02:06 PM -
0
இன்றைய (12) வெசாக் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு அரசாங்கத்தால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 34வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, அவர்களுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையர் காமினி பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, சிறையில் உள்ள 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் 04 பெண் கைதிகளும் 384 ஆண் கைதிகளும் உள்ளடங்குவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வெசாக் தினத்தை முன்னிட்டு, சிறைக் கைதிகளை சந்திக்க பார்வையாளர்களுக்கு விசேட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றும் நாளையும் (13) இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.