ஏனையவை
உலக வர்த்தக தமிழர்கள் மாநாடு 2025

May 12, 2025 - 04:40 PM -

0

உலக வர்த்தக தமிழர்கள் மாநாடு 2025


உலக வர்த்தக தமிழர்கள் மாநாடு 2025 மலேசியா கோலாலம்பூரில் உலக வர்த்தக தமிழ் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 

இது தொடர்பாக இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போது மேலும் தெரிவிக்கையில்,

 

திரைகடல் ஓடியும் திரவியம் தேடியவர்கள் தமிழர்கள் உலகெங்கும் தமிழர்கள் ஆதிகாலத்திலேயே வியாபாரத்தின் மூலமாக தனது சமுதாயத்தையும் தனது சமூகத்தையும் முன்னேற்றுவதற்கு பல்வேறு விதமான வேலைகளையும் வியாபாரத்தையும் செய்தார்கள்.

 

உலகத்தில் முதன் முதலில் செல்வம் பெருகுவதற்காக பல நாடுகளுக்கு பயணித்து பல நாடுகளில் மிக முக்கியமான வியாபார வெற்றியாளர்களாக மாறியவர்கள் தமிழர்கள் உலக தமிழர்கள் முன்னேற்றம் பல்வேறு துறைகளில் நிகழ்ந்து வருகிறது. 

தமிழர்கள் தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பல பகுதிகளில் பரவியுள்ளனர். 70 மில்லியன் பேர் தமிழை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். 19 - 20ஆம் நூற்றாண்டுகளில் தொழில் வாய்ப்புகளுக்காகவும், அரசியல் காரணங்களுக்காகவும் பெரும் குடியேற்றங்கள் நிகழ்ந்தன.

 

16 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் பேசும் வர்த்தகர்கள் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். இப்போதும் கூட உலக அளவில் வெற்றிகரமாக செயல்படும் முதல் 10 நிறுவனங்கள் அனைத்திற்கும் மிக முக்கியமான பதவிகளை வகிப்பவர்களும் நமது தமிழர்களே, ஆதியில் வியாபாரம் செய்தவர்கள் இப்போது வேலை ஆட்களாக மாறி உள்ளார்கள் தற்போது ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் தமிழர்களை உலக அளவில் பிரகாசிக்க வைக்க ஒரு அற்புதமான வாய்ப்பை ஏற்படுத்துவது தான் எங்களது நோக்கமே.

 

அந்த நோக்கத்தின் படி வரும் ஜூலை மாதத்தில் 3,4,5,6 & 7 ஆகிய திகதிகளில் மலேசியா கோலாலம்பூரில் உலக தமிழர்களின் வர்த்தக மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளோம்.

 

இந்த மாநாட்டின் மூலம் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கும் வியாபார வெற்றி தமிழர்களை ஒன்றிணைத்து உலக அளவில் தமிழர்களின் வியாபார முன்னேற்றத்திற்கான பல்வேறு விதமான கலந்துரையாடல்களையும் ஏற்பாடு செய்துள்ளோம்.

 

இந்த மாநாட்டின் மூலமாக வரும் காலத்தில் எந்த மாதிரியான வியாபாரத்தில் வெற்றி பெற முடியும் அதற்கு முதலீடுகளை எவ்வாறு உருவாக்க வேண்டும் அதற்குரிய திட்டங்களை எவ்வாறு தீட்ட வேண்டும் அதற்குரிய செயல்பாடுகளை செய்ய என்ன மாதிரியான விஷயங்களை கற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என்கின்ற விஷயங்களை கலந்துரையாட இருக்கின்றோம்.

 

தமிழ் முன்னேற வேண்டும் என்றால் தமிழர்கள் முன்னேற வேண்டும் தமிழர்கள் உலக அளவில் தமிழர்களுக்கான வியாபார வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் அதற்குரிய வாய்ப்புகளை அதிகரிக்கவே இந்த அற்புதமான நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம்.

 

உலகமயமாதல் சூழலில் தமிழ் மொழி மற்றும் பண்பாடு சிதைந்து போகாமல், புதிய அம்சங்களை ஏற்று மேம்பட வேண்டும். தமிழர் பண்பாட்டை இழக்காமல் உலகப் பண்பாட்டுடன் இணைந்து முன்னேறுவது முக்கியம்.

 

தமிழ் மொழி மற்றும் மதத்தை பிரித்துவிட்டு, சமுதாய முன்னேற்றத்திற்கு கல்வி, பண்பாடு, அரசியல் சிந்தனை ஆகியவற்றில் ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம்.

 

இந்த அற்புதமான நிகழ்விற்கு உலகெங்கும் இருக்கக்கூடிய தமிழர்கள் வந்து கலந்து கொள்ள வேண்டும் அதன் மூலமாக உலக தமிழர்களின் முன்னேற்றத்தின் மூலமாக தமிழை தமிழர்களை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக உங்கள் அனைவரையும் அழைக்கின்றோம் வாருங்கள் ஒன்றிணைந்து முன்னேறுவோம் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05