May 12, 2025 - 07:14 PM -
0
தெரண ஊடக வலையமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள '' 24 மணிநேரம் தொடர்ச்சியாக இடம்பெறும் இலங்கையின் மிகப்பெரிய வெசாக் தன்சல் (உணவு தானம்) நிகழ்வு சற்றுமுன்னர் கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் ஆரம்பமானது.
இந்த பிரமாண்டமான நிகழ்வானது, இலங்கை தொழில்முறை சமையல்காரர்கள் சங்கம் மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியவை தெரணவுடன் கைகோர்த்து இரண்டாவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று காலை முதல் இடம்பெற்று வந்தன.
24 மணிநேரம் தொடர்ந்து நடைபெறும் இந்த மாபெரும் தன்சல் நிகழ்வு, இன்று மாலை தொடங்கியுள்ள நிலையில், நாளை மாலை (13) 7.00 மணி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த தன்சலில் கலந்து கொள்வதற்காக பெருந்திரளான மக்கள் தற்போது அங்கு நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

