செய்திகள்
தெரண 24 மணி நேர தன்சல் - நீண்ட வரிசையில் மக்கள்

May 13, 2025 - 08:25 AM -

0

தெரண 24 மணி நேர தன்சல் - நீண்ட வரிசையில் மக்கள்

தெரண ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்துள்ள 24 மணி நேர இலங்கையின் மிகப்பெரிய தன்சல் தற்போது கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்று வருகிறது.


இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தன்சல் நிகழ்வு நேற்று (12) இரவு 7 மணிக்கு ஆரம்பமானது.


இன்று இரவு வரை தொடர்ச்சியாக இந்த தன்சல் இடம்பெறவுள்ள நிலையில், இதில் கலந்துகொள்ளும் உங்களுக்கு சுவையான உணவு வகைகளை ருசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.


இலங்கை தொழில்முறை சமையற்கலைஞர்கள் சங்கம் மற்றும் கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து தெரண ஊடக வலையமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது.


நேற்று பகல் முதல் தன்சலில் பங்கேற்பதற்காக மிகப்பெரிய மக்கள் கூட்டம் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் ஒன்றுகூடியிருந்த நிலையில், தற்போதும் சுதந்திர சதுக்க வளாகத்தைச் சுற்றி நீண்ட வரிசைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
 

Comments
0

MOST READ
01
02
03
04
05