செய்திகள்
நாட்டில் ஏற்படும் மரணங்களில் 70% க்கு காரணம் உயர் இரத்த அழுத்தம் - சுகாதார அமைச்சு

May 14, 2025 - 08:39 AM -

0

நாட்டில் ஏற்படும் மரணங்களில் 70% க்கு காரணம் உயர் இரத்த அழுத்தம்  -  சுகாதார அமைச்சு

இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 70 சதவீதம், உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் நோய்களால் நிகழ்கின்றன என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

 

இந்த பிரிவின் விசேட வைத்தியர் சமிந்தி சமரகோன் கூறுகையில், 2021ஆம் ஆண்டு தொற்றா நோய்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நாட்டு மக்களில் 34.8 சதவீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

 

இவர்களில் 64 சதவீதமானோர் இதற்கு எவ்வித மருந்துகளையும் பயன்படுத்தவில்லை எனவும் விசேட வைத்தியர் சமிந்தி சமரகோன் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05