Header Logo
SLIC
கிழக்கு
அம்பாறையில் நினைவுக் கஞ்சி

May 14, 2025 - 09:50 AM

அம்பாறையில் நினைவுக் கஞ்சி
Mobitel Inner 1278
EDEX Inner

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்பு வாரம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வும் நினைவேந்தல் பிரார்த்தனையும் சங்கத்தின் மாவட்டத் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் நேற்று (13) நடைபெற்றது.

 

சங்கத்தின் நிருவாக உறுப்பினர்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வு திருக்கோவில் தம்பிலுவில் பொதுச்சந்தைக்கு முன்பாக இடம்பெற்றது.

 

சிறப்பாக இடம்பெற்ற இந்நிகழ்வில் சங்கத்தின் ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான தாமோதரம் பிரதீவனும் கலந்து கொண்டிருந்தார். மேலும் விசேட பூசை வழிபாடு இடம் பெற்ற பின்னர் முள்ளிவாய்க்கால் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்கள் வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் உள்ள கஞ்சி காய்ச்சப்பட்டு சிரட்டை ஊடாக மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

 

நேற்று முதலாவது இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்தனர்.

 

இந்த முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வைப்பதற்கான அரிசியினை ஒவ்வொரு கடையாகச் சென்று புடி அரசி பெற்று சேமித்தே காய்ச்சியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278