May 14, 2025 - 11:20 AM -
0
உலகளாவிய ரீதியிலுள்ள சிறந்த 10 சதவீத ரிசோர்ட்களில் ஒன்றாக கௌரவிக்கப்பட்டுள்ளது இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள சொகுசான ஹோட்டலான Sun Siyam பாசிகுடா, அண்மையில் Tripadvisor இன் Travelers’ Choice Awards Best of the Best for 2025ஐ சுவீகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதனூடாக, உலகின் சிறந்த 10 சதவீத ஹோட்டல்களில் ஒன்றாக Sun Siyam பாசிகுடா உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த கௌரவிப்பினூடாக, சிறந்த விருந்தினர் அனுபவங்கள், நிலைபேறான செயற்பாடுகள் மற்றும் சமூக ஈடுபாடு போன்றவற்றில் ரிசோர்ட்டின் ஒப்பற்ற அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பயண வழிகாட்டுதல் தளமாக, Tripadvisor பயணிகள் மற்றும் உணவகங்களில் இணையற்ற அதிகாரத்தைக் கொண்டுள்ளது. இந்த விருது, 12 மாத காலப்பகுதியில் Tripadvisor-ஐப் பார்வையிட்டு, உண்மையான, நேரடி மதிப்பாய்வை வழங்கிய சமூகத்தில் உள்ளவர்களின் உண்மையான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. இது பயணிகளின் விருப்பங்களில் மதிப்புமிக்க மற்றும் நம்பகமான பெயராக அமைகிறது.
2023 நவம்பர் மாதம் மீள ஆரம்பிக்கப்பட்ட Sun Siyam பாசிகுடா, 34 அதிகளவு இடவசதி கொண்ட ஒன்று மற்றும் இரண்டு படுக்கையறை தோட்டம் மற்றும் கரையோர பெவிலியன்களை வழங்குகின்றன. இவை ஒவ்வொன்றும் சிறந்த உள்ளக அம்சங்களையும், தங்கமான தோற்றப்பாடுகளையும் கொண்டுள்ளன. மீள வடிவமைப்பை Studio Sixty7 மேற்கொண்டிருந்ததுடன், சிறந்த உள்நாட்டு அம்சங்கள் மற்றும் ஒப்பற்ற வடிவமைப்புகளையும் உள்வாங்கியிருந்தது. இலங்கையின் சிறந்த திறமை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில், உள்நாட்டு கலைஞர்களுடன் ரிசோர்ட் கைகோர்த்து தமது அலங்காரங்களை முன்னெடுத்திருந்தது.
Sun Siyam ரிசோர்ட்ஸ் இல் ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக பணியாற்றும் Sun Siyam பாசிகுடாவின் பொது முகாமையாளர் அர்ஷத் ரிஃபாய் கருத்துத் தெரிவிக்கையில், “உலகின் சிறந்த ரிசோர்ட்ஸ்களுக்கு நிகராக நாம் கௌரவிக்கப்பட்டுள்ளதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எமது மீளத்திறப்பு மேற்கொள்ளப்பட்டு இரண்டு வருட காலப்பகுதியினுள், எமது உலகத் தரம் வாய்ந்த அணியினர் மற்றும் விருந்தினர்களின் பங்களிப்ப மற்றும் ஆதரவின்றி எம்மால் இந்த சாதனையை எய்தியிருக்க முடியாது. ஒவ்வொரு பயணியும் பயணம் செய்ய எதிர்பார்க்கும் இலங்கைக்கு பங்களிப்ப வழங்குவதையிட்டு நாம் பெருமை கொள்கிறோம்.” என்றார்.
Sun Siyam பாசிகுடாவின் வசதிகளில் serene spa, an infinity pool மற்றும் பரந்த உணவகத் தெரிவுகளான இலங்கையின் கிழக்கு கரையோரப் பகுதியைச் சேர்ந்த மாபெரும் வைன் விற்பனை பகுதியான The Cellar மற்றும் உள்நாட்டின் தெரிவுக்குரிய பல தேயிலைத் தெரி்வுகளை வழங்கும் Tea House போன்றன அடங்கியுள்ளன. விருந்தினர்களுக்கு பல்வேறு நீர் விளையாட்டுகளான snorkeling மற்றும் jet-skiing போன்றவற்றுடன், கலாசார அம்சங்களான கிழக்கு பாரம்பரிய பகுதிகளையும் அனுபவிக்க முடியும்.
முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17 சதவீத அதிகரிப்பை பதிவு செய்து, கடந்த மாதம் இறுதி வரையில் சுமார் 890,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சமூகமளித்துள்ள நிலையில், இலங்கை சுற்றுலாத்துறையில் மறுமலர்ச்சியை எய்தி வரும் காலப்பகுதியில் ரிசோர்ட்டுக்கு வழங்கப்பட்ட இந்த கௌரவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த சேவைகளைப் பெற்றுக்கொடுக்க Sun Siyam பாசிகுடா தன்னை தொடர்ந்தும் அர்ப்பணித்துள்ளதுடன், பிரயாணிகளுக்கு ஒப்பற்ற சொகுசு, கலாசாரம் மற்றும் நிலைபேறாண்மை போன்ற அம்சங்களை அனுபவிக்க முடியும். கிழக்குப் பிராந்தியத்தில் அதிகளவானோர் விரும்பும் ரிசோர்ட் எனும் நாமத்தைப் பெற்றுள்ள Sun Siyam பாசிகுடாவில் முற்பதிவுகளை மேற்கொள்ள 0652055555 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் அல்லது மேலதிக தகவல்களுக்கு https://www.sunsiyam.com/sun-siyam-pasikudah/எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்.

