May 14, 2025 - 03:39 PM -
0
பிக் பாஸ் வீட்டில் தங்கியிருந்த கூல் சுரேஷ் அது குறித்து விமர்சித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. பிக் பாஸ் பிரபலங்களை வைத்து படம் எடுத்தால் போட்ட பணம் போட்டது தான் திரும்ப வராது என்றும் கூறியிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்ட ஓவியா பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார்.
சினிமா ரசிகர்கள் அவரை தலையில் வைத்து கொண்டாடினார்கள். அதை பார்த்த பலருக்கும் நம்பிக்கை வந்தது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நம் கெரியர் பிக்கப் ஆகி வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு செல்லலாம் என நம்பினார்கள், நம்புகிறார்கள்.
அந்த நம்பிக்கையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 ஆவது சீசனில் கலந்து கொண்ட கூல் சுரேஷ் அது குறித்து பேசிய விஷயம் அனைவரயும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
நான் பிக் பாஸுக்கு போயிட்டு வந்தவன் தான். ஆனால் பிக் பாஸுக்கு போயிட்டு வந்தால் நல்லது எதுவும் நடக்காது. அது ஒரு தரித்திரம் பிடித்த நிகழ்ச்சி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் 8 சீசன் முடிந்துவிட்டது.
அதில் கலந்து கொண்டவர்களோ, வெற்றி பெற்றவர்களோ, கெட்ட பெயர் வாங்கிவிட்டு வெளியே வந்தவர்களும் சரி, நல்ல பெயருடன் வெளியே வந்தவர்களும் சரி யாராவது ஒருவராவது வெளியே தெரிந்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். அவங்க வெளியே தெரிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்களால் மட்டும் தான் முடியும்.
காசி ராமேஸ்வரம் போய் கஷ்டத்தை தீர்த்துவிட்டு வரும் இடம் போன்று தான் பிக் பாஸ். பிக் பாஸ் வீட்டுக்கு போயிட்டு வந்தவர் தானே நான் என நீங்கள் நினைக்கலாம். நான் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தான் அங்கு சென்றேன். நான் வேலை இல்லாமல் இருந்தபோது வேலைக்கு அழைத்தார்கள் நானும் போனேன். அங்கு நடப்பது எல்லாம் உண்மை தான்.
பிக் பாஸை குறை சொல்வதற்காக இல்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அங்கீகாரம் கிடைக்காது. அது ஒரு ராசியில்லாமல் இருக்கு. ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சம்பளம், சாப்பாடு உண்டு. சொகுசாக இருக்கலாம். நல்லவங்களா அந்த நிகழ்ச்சிக்கு செல்பவர்களின் கெட்ட முகம் வெளியே தெரிந்துவிடும். வெளியே கெட்ட முகம் உள்ளவர்கள் உள்ளே செல்லும் போது அவரின் நல்ல மனசு வெளியே தெரிந்துவிடும். அது தான் பிக் பாஸ். அது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஆகும்.
இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை சேர்த்தால் 1,000 ரூபாய் போட்டாலும், 1,000 கோடி போட்டாலும் திரும்ப வராது. கமல் சாரே கடந்த ஆண்டு அந்த நிகழ்ச்சியை விட்டு விலகிவிட்டார் என்றார்.