May 14, 2025 - 05:03 PM -
0
கொமர்ஷல் வங்கிக்கும் அவுஸ்திரேலிய உயர் கல்வி நிலையமான ACH இட்கும் இடையிலான ஒத்துழைப்பின் விளைவாக, வெளிநாடுகளில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பெற்று தேவையான நிதியை எளிதாக திரட்டக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வங்கிக்கும் ACH கல்வி நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமானது மாணவர்கள் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, இங்கிலாந்து மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள ACH இணைப்புப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைத் தொடர்வதற்கு தமது மாணவர் கோப்புகளைத் திறந்து கல்விக் கடன்களைப் பெற வழி வகுக்கிறது.
கொமர்ஷல் வங்கியானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வியைத் தொடர்ந்து கொண்டு தொழில் புரியும் மற்றும் தொழில் புரியாத மாணவர்களுக்கு, நெகிழ்வான விதிமுறைகளுடன் கூடிய கல்விக் கடன் வசதிகளை வழங்குகிறது. இந்தக் கடன் வசதிகள் நீண்ட மீளச் செலுத்தும் காலம் மற்றும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
வங்கியானது இந்த ஒத்துழைப்பிற்கிணங்க கடனின் மூலதனத் திருப்பிச் செலுத்துதல்களை ஆரம்பிப்பதற்கு முன்னதாக முதல் இரண்டு வருடங்கள் வட்டியை மட்டுமே செலுத்தும் சலுகையை வழங்குகிறது. அத்துடன் கற்கை கட்டணமானது ரூ. 10 மில்லியன் வரையானதாக இருக்கும் பட்சத்தில் கட்டணத்தில் 80% இனை ஈடு கட்டும் வகையில் கடன் வசதியானது வழங்கப்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது. மேலதிகமாக, விண்ணப்பதாரர்கள் தற்போதுள்ள விகிதத்திலிருந்து 0.5% சிறப்பு விகிதக் குறைப்பு, ஆவணக் கட்டணங்களில் 50% தள்ளுபடி மற்றும் தந்தி பரிமாற்றக் கட்டணங்களில் 50% தள்ளுபடி என்பவற்றின் மூலம் பயனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கொமர்ஷல் வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதலாவது இலங்கை வங்கியாகும். மற்றும் கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) துறைக்கு மிகப்பெரிய கடனுதவி வழங்குவதோடு, டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது. அத்துடன் இலங்கையின் முதலாவது 100% கார்பன் நடுநிலை வங்கியாகும். கொமர்ஷல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயல்படுத்துகிறது, மேலும் இலங்கை வங்கிகளுக்கிடையில் பரந்த சர்வதேச தடத்தைக் கொண்டுள்ளது, பங்களாதேஷில் 20 நிலையங்கள், மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் பெரும்பான்மையுடன் கூடிய முழு அளவிலான Tier I வங்கி ஆகியவற்றை கொண்டு திகழ்கிறது.வங்கியின் முழு உரித்தான துணை நிறுவனமாக CBC ஃபினான்ஸ் லிமிடெட் திகழ்கிறது. வங்கியானது அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பரந்த அளவிலான நிதிச் சேவைகளையும் வழங்குகிறது.

