மலையகம்
நானுஓயாவில் எரிபொருள் பௌசர் விபத்து

May 14, 2025 - 06:47 PM -

0

நானுஓயாவில் எரிபொருள் பௌசர் விபத்து

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் பயணித்த பௌசர் ஒன்று இன்று (14) மாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

கொழும்பிலிருந்து ஹட்டன் வழியாக வெளிமடை நோக்கி பயணிக்கும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

 

குறித்த பௌசரில் 33,000 லீட்டர் டீசல் மற்றும் பெற்றோல் வெவ்வேறாக பிரித்து  இருந்ததாகவும் பெருமளவிலான எரிபொருள் இந்த விபத்தில் வெளியேறி வீணாகியுள்ளதுடன் குறித்த பகுதியில் பரவியுள்ளது எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

 

பௌசர் கவிழ்ந்ததையடுத்து வழிந்தோடிய பெற்றோல், டீசலை பெருந்திரளான பொது மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து சேகரித்துக் கொண்டனர்.

 

எனினும் குறித்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05