செய்திகள்
அமெரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை பயற்சியாளராக புபுது தசநாயக்க!

May 15, 2025 - 11:19 AM -

0

அமெரிக்க கிரிக்கெட்  அணியின் தலைமை பயற்சியாளராக புபுது தசநாயக்க!

அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் புபுது தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். 

54 வயதான புபுது தசநாயக்க அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்பது இது இரண்டாவது முறையாகும். 

இதற்கு முன்னர் புபுது கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் தலைமைப் பயிற்சியாளராக கடமையாற்றியிருந்தார். 

அமெரிக்க அணி ஒருநாள் கிரிக்கெட் அந்தஸ்தை பெற்றுக்கொள்வதற்கும் கிரிக்கெட் உலகில் வளர்ந்து வரும் நாடாக நிலைநிறுத்துவதற்கும் புபுது தசநாயக்க பல்வேறு வழிகளில் உதவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05