May 15, 2025 - 01:25 PM -
0
இலங்கையின் விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ள ரிட்ஸ்பரி, ஏப்ரல் மாதம் சவுதி அரேபியாவின், தமாம் நகரில் நடைபெற்ற 6ஆவது ஆசிய இளைஞர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் 2025 போட்டிகளில் சிறப்பாக செயலாற்றியிருந்த 5 தடகள வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.
தமக்குரிய போட்டிகளில் வெற்றியீட்டிய எட்டு தடகள வீரர்களில், ஐந்து பேர் தாய்நாட்டுக்கு ஒரு வீரர் நிகழ்ச்சித் திட்டத்தில் அங்கம் பெற்றிருந்தனர். அவர்கள் வெளிப்படுத்தியிருந்த சிறந்த சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட்டதுடன், சர்வதேச மட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பையும் கௌரவித்திருந்தது.
கொழும், சினமன் லைஃப் ஹோட்டலில் மே 2ஆம் திகதி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தடகள வீரர்களுக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டதுடன், நிதிசார் உதவிகளும் வழங்கப்பட்டன. CBL ஃபுட்ஸ் இன்டர்நஷனல் லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரி கமல் கீகனகே மற்றும் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் நிலுக்ஷா பஸ்டியன்ஸ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இலங்கையின் தேசிய கொடியை உயரத்தில் பறக்கச் செய்வதில் பங்களிப்பு வழங்கியிருந்த தடகள வீரர்களின் ஒப்பற்ற அர்ப்பணிப்பை அவர்கள் பாராட்டியிருந்தனர். இந்நிகழ்வில், ரிட்ஸ்பரி தாய்நாட்டுக்கு ஒரு வீரர் நிகழ்வின் ஆலோசகர் சுசந்த பெர்னான்டோ, ரிட்ஸ்பரி பிரிவு முகாமையாளர் அருண லியனபத்திரன மற்றும் ரிட்ஸ்பரி உதவி வர்த்தகநாம முகாமையாளர் துலஞ்ஜன் அபேசேகர ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
கௌரவிப்பு நிகழ்வில், பதக்கங்களை வெற்றியீட்டியவர்களான, 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் மற்றும் அஞ்சலோட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் ஆகியவற்றை வென்ற எம்.ஜி.ரி. அபிஷேக பிரேமசிறி, 100 மீற்றர் ஓட்டம் மற்றும் மெட்லி அஞ்சலோட்டம் ஆகியவற்றில் இரு வெள்ளிப் பதக்கம் வென்ற தனஞ்ஜன செவ்மினி, வெண்கலப் பதக்கம் வென்ற 800 மீற்றர் ஓட்டப்பந்தய வீரர் எச்.டி. ஷவிந்து அவிஷ்க, 1500 மீற்றர் ஓட்டப் பந்தய வீரர் லஹிரு அச்சிந்த மற்றும் உயரம் பாய்தல் வீரர் ஜே.எச்.பி. நெத்ய சம்பத் ஆகியோர் அடங்கியுள்ளனர்.
தடகள வீரர்களின் சிறந்த செயற்பாடுகளின் பின்புலமாக அமைந்திருந்த பயிற்றுவிப்பாளர்களுக்கும் கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு கௌரவிக்கப்பட்ட ஐந்து பயிற்றுவிப்பாளர்களில், புத்திக நுவன், அனுருத்த நானயக்கார, ஆர்.எச்.எம். ஜுட் சிந்தக, கே.எச்.ஏ.டி.எஸ்.ஐ. குலரட்ன மற்றும் சுரஞ்ஜித் செனரத் ஆகியோர் அடங்கியிருந்தனர்.
சம்பியன்ஷிப் போட்டிகளில் தடகள வீரர்கள் பதக்கம் வென்று, இலங்கைக்கு கீர்த்தி நாமத்தைப் பெற்றுக் கொடுத்ததில், இவர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ரிட்ஸ்பரி தாய்நாட்டுக்கு ஒரு வீரர் திட்டம், இலங்கை முழுவதும் அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதன் மூலம் தேசிய தடகளத்திற்கான நிறுவனத்தின் ஆதரவை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த முயற்சி கணிசமாக விரிவடைந்து, தற்போது நாடு முழுவதும் 65 நம்பிக்கைக்குரிய திறமையாளர்களை வளர்த்த வண்ணமுள்ளது. இந்த முயற்சி விளையாட்டு வீரர்களுக்கு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறந்து விளங்க உதவுவதற்கும், நாட்டில் தடகள வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கும் அத்தியாவசிய நிதி உதவியை வழங்குகிறது.

