May 15, 2025 - 07:19 PM -
0
அக்கரைப்பற்று - ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட வீடு ஒன்றை நேற்று (14) பொலிஸார் முற்றுகையிட்டனர்.
இதன்போது சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் உட்பட சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்ததுடன் 250 மில்லிலீற்றர் கொண்ட 75 மதுபான போத்தல்களையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரை கண்டு தப்பியோடிய நிலையில் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட அம்பாறையைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.
குறித்த வீட்டில் நீண்ட காலமாக சூதாட்டம் மற்றும் மதுபான விற்பனை போன்ற பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் வீட்டின் உரிமையாளர் பொலிஸாரின் வேவு பார்ப்பவர் என தெரிவித்து பிரதேசத்தில் மக்களை அச்சுறுத்தி பல்வேறு அடாவடிகள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவருக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் பொலிஸார் விசனம் தெரிவித்தனர்.
--