May 16, 2025 - 08:51 AM -
0
இலங்கையின் புகழ்பூத்த ஹோட்டலான கோல் ஃபேஸ் ஹோட்டலிலுள்ள தனித்துவம் வாய்ந்த சுவை விருந்து உணவகமான 1864 Limited Edition ஆனது, மிச்செலின் நட்சத்திர விருது பெற்ற புகழ்பூத்த பிரெஞ்சு சமையல் கலை வல்லுனரான செர்ஜ் செனெட் அவர்களின் தலைமையில் மறக்க முடியாத சுவை விருந்து அனுபவமாக அமைந்துள்ள L’EXPÉRIENCE FRANÇAISE என்ற நிகழ்வை 2025 மே 16 முதல் 18 வரை ஏற்பாடு செய்துள்ளது.
பிரெஞ்சு உணவுக்கலையில் மகத்துவம் பெற்றுள்ள சமையல் கலை வல்லுனரான செர்ஜ் செனெட் அவர்கள், ஐந்து தசாப்தங்களுக்கும் மேற்பட்ட சமையல் கலை பாரம்பரியத்தின் மகிமையை இலங்கையில் காண்பிக்கின்றார். பிரான்ஸின் ரெய்ம்ஸில் தனது பயணத்தை ஆரம்பித்த அவர், புகழ்பூத்த பிரெஞ்சு சமையல் கலை வல்லுனர்களான ஜொயல் ரொபுச்சோன், ஜோர்ஜஸ் பிளாங்க், மற்றும் மைக்கேல் ரோஸ்டாங் ஆகியோரின் கீழ் ஆரம்பப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டார். கடந்த காலங்களில் Château de Rochegude மற்றும் தென் பிரான்ஸில் அவர் தோற்றுவித்த, குடும்பத்தால் நிர்வகிக்கப்படும் பிரசித்தி பெற்ற உணவகமான Entre Vigne et Garrigue உள்ளிட்ட பல மிச்செலின் நட்சத்திரங்களை அவர் சம்பாதித்துள்ளார். சமையல் கலையில் மகத்துவத்திற்காக வழங்கப்படும் தேசிய அளவிலான அங்கீகாரமான Meilleur Ouvrier de France என்ற பிரசித்தி பெற்ற பட்டத்தை 1993 ம் ஆண்டில் அவர் பெற்றுக்கொண்டார்.
சமையல் கலைக்கு தனது வாழ்வை அர்ப்பணித்துள்ள இந்த சமையல் கலை மேதையின் கைவண்ணத்தில் தயாரிக்கப்படுகின்ற நவீன பிரெஞ்சு உணவு வகைகளின் நேர்த்தி, வேலைப்பாடு மற்றும் உணர்வு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் பிரத்தியேக உணவுகளை அனுபவிக்கும் வாய்ப்பினை 1864 Limited Edition உணவகத்திற்கு விருந்தினர்களாக வருகின்றவர்கள் மூன்று தினங்களாக பெற்றுக்கொள்ளவுள்ளனர். தயாரிக்கப்படும் உணவு வகை ஒவ்வொன்றும், காலத்திற்கு ஏற்றவாறான சேர்க்கைப் பொருட்கள், பிரத்தியேகமான நுட்பம், மற்றும் பிரெஞ்சு உணவு மேசையின் பாரம்பரியங்கள் மீதான ஆழமான மரியாதை ஆகியவற்றுடன், கொழும்பிலுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற உணவங்களில் ஒன்றாகத் திகழும் இந்த உணவகத்தில் இவை பரிமாறப்படுகின்றன.
சர்வதேச உணவு வகைகளின் மகத்துவத்தைப் போற்றிக் கொண்டாடி, உண்மையான உணவு விருந்தின் தனித்துவமான தருணங்களைத் தோற்றுவித்து, இலங்கைக்கு உலகத்தரம் வாய்ந்த உணவு விருந்து அனுபவங்களைக் கொண்டு வருவதில் 1864 Limited Edition தற்போது காண்பித்து வருகின்ற அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாகவே சமையல் கலை வல்லுனர் செனெட் அவர்களின் வருகை அமைந்துள்ளது.
மட்டுப்படுத்த அளவிலேயே கிடைக்கப்பெறுகின்றமையால், முன்பதிவை மேற்கொள்வது ஆலோசிக்கத்தக்கது. விசாரணைகள் மற்றும் முன்பதிவுகளுக்கு, தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள்: +94 74 260 1641
1864 Limited Edition உணவகம் குறித்த விபரங்கள்
வரலாற்றுச் சிறப்பு மிக்க கோல் ஃபேஸ் ஹோட்டலில் அமைந்துள்ள 1864 Limited Edition உணவகம், சமகாலத்து ஐரோப்பிய உணவுகள், கலை மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றைக் கொண்டாடுவதற்கான ஒரு நவீன உணவகமாகத் திகழ்ந்து வருகின்றது.
மிகவும் விசேடமாகத் தயாரிக்கப்பட்ட வைன் குடிவகை, சிறந்த கைவண்ணத்தில் தயாரிக்கப்பட்ட கொக்டெயில் பான வகை, மற்றும் இலங்கையின் புகழ்பூத்த கலைஞர்களின் கண்காட்சிகள் ஆகியவற்றைக் கொண்ட இந்த உணவகம் எதிலும் சிறந்தவற்றை நாடும் விருந்தினர்களுக்கு பல்லுணர்வு அனுபவத்தை வழங்குகின்றது. ஹோட்டல் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டைத் தனது பெயரில் கொண்டுள்ளதுடன், 2024 ம் ஆண்டு இலங்கை சுற்றுலாத்துறை விருதுகள் நிகழ்வில் “Best Contemporary Fine Dining Restaurant” என்ற விருதையும் வென்றுள்ளதுடன், கொழும்பிலுள்ள மிகவும் நேர்த்தியான மற்றும் உள்ளுணர்வைத் தூண்டும் மிகச் சிறந்த உணவகங்களில் ஒன்றாகத் தொடர்ந்தும் திகழ்ந்து வருகின்றது.