May 17, 2025 - 10:03 AM -
0
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கான சந்திப்புகள் நேற்று (16) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் கந்தரோடையில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டணி இணைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் இல்லத்தில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசு கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் சங்கிலியன் வீதி நல்லூரில் அமைந்துள்ள எம் ஏ சுமந்திரன் இல்லத்தில் நடைபெற்றது.
சந்திப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் செல்வம் அடைக்கலநாதன் சுரேஷ் பிரேமசந்திரன் சிவநாதன் வேந்தன் சிவநாதன் வேந்தன் போன்றோர் கலந்து கொண்டு இருந்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகர சபையின் மேஜர் வேட்பாளர் தீபன் திலீசின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி காண்டீபன் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்
இலங்கைத் தமிழரசு கட்சி சார்பில் பதில் தலைவர் சி வி கே சிவஞானம் பொதுச் செயலாளர் எம் ஏ சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருந்தனர்.
இச்சந்திப்பில் உள்ளூராட்சி அதிகார சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
--