செய்திகள்
வெறிச்சோடிய நானுஓயா ரயில் நிலையம்

May 17, 2025 - 11:38 AM -

0

வெறிச்சோடிய நானுஓயா ரயில் நிலையம்

ரயில் நிலைய அதிபர்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நானுஓயாவில் பயணிகள் கூட்டமில்லாததால் ரயில் நிலைய வளாகம் வெறிச்சோடி காணப்படுகின்றது.

 

ஆட்சேர்ப்பு பிரச்சினைகள், பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து நேற்று (16) நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தினர்  பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

 

இதனால் நானுஓயாவிலிருந்து இயக்கப்படும் விசேட  ரயில்கள் ரத்து செய்யப்பட்டன மேலும் இன்று (17) காலை முதல் ஏனைய ஊழியர்கள் இணைந்து ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் ரயில் கடவைகள் திருத்த பணிகளும் முன்னெடுத்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.

 

எவ்வாறாயினும் இன்று காலை  நானுஓயாவில் இருந்து பதுளை நோக்கி பயணிப்பதற்கு ஏற்கனவே ரயிலில் ஆசனங்கள் முற்பதிவு செய்த உள்நாட்டு வெளிநாட்டு  பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் அத்துடன் இனி வரும் நாட்களில் இவ்வாறான பணிப்புறக்கணிப்புக்களை ஆரம்பிக்கும் போது பொது மக்களின் நலன் கருதி பாதிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05