செய்திகள்
கொலைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் கைது

May 17, 2025 - 12:22 PM -

0

கொலைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் கைது

கல்கிஸ்ஸை, சில்வெஸ்டர் வீதியில் திரும்பும் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 19 வயது இளைஞனை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையம் மற்றும் கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேக நபர் ஹோமாகம, மாகும்புர பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும், 45 வயதுடைய மாகும்புர, பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

இதற்கிடையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் பாகங்கள், 2 போலி எண் தகடுகளை சந்தேக நபரின் வீட்டின் பின்னால் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

இந்தக் கொலைக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 2 நபர்களை கல்கிஸ்ஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் முன்னர் கைது செய்திருந்தனர். 

குறித்த சந்தேக நபர்கள் 21 மற்றும் 32 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05